Home /News /entertainment /

ஆதரவற்றோருடன் இணைந்து பிறந்த நாளை கொண்டாடிய நடிகை பூமிகா – பிரபலங்கள் வாழ்த்து

ஆதரவற்றோருடன் இணைந்து பிறந்த நாளை கொண்டாடிய நடிகை பூமிகா – பிரபலங்கள் வாழ்த்து

நடிகை பூமிகா

நடிகை பூமிகா

தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோக்கள் பலருடன் நடித்திருக்கிறார் பூமிகா. தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீதா ராமம் படத்திலும் பூமிகா இடம்பெற்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகை பூமிகா தனது பிறந்த நாளை ஆதரவற்றோருடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.

    விஜய் நடித்த பத்ரி, ரோஜாக் கூட்டம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பூமிகா. இவ்விரு படங்களும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளைக் குவித்தன.

    சூர்யா நடிப்பில் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் படத்திலும் பூமிகா இடம்பெற்றிருப்பார். இந்தப் படத்தின் முன்பே வா என் அன்பே வா பாடல், என்றைக்கும் கேட்கக்கூடிய பாடல்களில் ஒன்றாக உள்ளது. இந்த பாடலில் பூமிகாவின் பாவனை ரசிக்கும்படி அமைந்திருக்கும்.



    கடந்த 2000-ஆம் ஆண்டில் இருந்து பூமிகா திரைத்துறையில் இருந்து வருகிறார். இந்தி படங்களிலும் பூமிகா நடித்து பெயர் பெற்றுள்ளார்.



    தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோக்கள் பலருடன் நடித்திருக்கிறார் பூமிகா. தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீதா ராமம் படத்திலும் பூமிகா இடம்பெற்றுள்ளார்.



    தமிழில் அவர் நடித்துள்ள கண்ணை நம்பாதே என்ற படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் பூமிகா தனது 43 வது பிறந்த நாளை இன்று ஊட்டியில் கொண்டாடினார்.



    உதகையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நடிகை பூமிகா இன்று தனது பிறந்த நாளை உதகையிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் கேக் வெட்டி ஆதரவற்றோருடன் நடனமாடி கொண்டாடினார்.

    பிறந்த நாளையொட்டி, நடிகை பூமிகாவுக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood

    அடுத்த செய்தி