Home /News /entertainment /

நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய கார்த்தி

நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய கார்த்தி

விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய கார்த்தி

விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய கார்த்தி

விஜயகாந்த் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அவருடைய தைரியம்தான்.  அதேபோல் யார் வந்தாலும் சாப்பிடாமல் திருப்பி அனுப்பமாட்டார் என சிறு வயதில் இருந்தே கேள்விப்பட்டிருக்கிறேன் என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பொருளாளர் கார்த்தி, நடிகர் விஜயகாந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த்,  தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தலைவராக பதவி வகித்தார். அவர் இன்று தன்னுடைய 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு அவருக்கு பல்வேறு கட்சி பிரமுகர்களும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பொருளாளர் கார்த்தி,  நடிகர் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதற்கு பிறகு பேசிய கார்த்தி, விஜயகாந்த் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அவருடைய தைரியம்தான்.  அதேபோல் யார் வந்தாலும் சாப்பிடாமல் திருப்பி அனுப்பமாட்டார் என சிறு வயதில் இருந்தே கேள்விப்பட்டிருக்கிறேன்.

Also read... தள்ளிச் செல்கிறது பிசாசு-2 திரைப்படத்தின் வெளியீடு!

யாரிடமும் எந்த பாகுபாடும் இல்லாமல் அன்பு காட்டுவது எவ்வளவு பெரிய விஷயம்? இப்படிப்பட்ட ஒரு மனிதரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவதுதான் மரியாதையாக இருக்கும். அதிலும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்தியது நிறைவாக உள்ளது என தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Karthi, Vijayakanth

அடுத்த செய்தி