ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உதயநிதியை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்... காரணம் இது தான்!

உதயநிதியை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்... காரணம் இது தான்!

உதயநிதியை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

உதயநிதியை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக  பொறுப்பேற்றதற்கு , தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து  வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவர் அமைச்சராக பொறுப்பேற்ற அன்றே இனி திரைப்படங்களில் நடக்க போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனாலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக உதயநிதி இருந்து வருகிறார்.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதற்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நேற்று (12.1.22) நேரில் தலைமைச் செயலகத்தில் அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த சந்திப்பில், தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சச்சு, லதா, சோனியா, விக்னேஷ், நந்தா, பிரேம்குமார், ஶ்ரீமன், தளபதி தினேஷ், ஹேமச்சந்திரன், பிரகாஷ், காளிமுத்து, வாசுதேவன், நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ், துணை மேலாளர் ரத்தினகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும உதயநித் ஸ்டாலின் பொறுப்பேற்றதின் காரணமாக இளைஞர்கள் மேல்தளம் நோக்கி முன்னேறவும், விளையாட்டு வீரர்கள் உலக அரங்கில் தங்கப்பதக்கங்கள் குவித்திட்டு தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கவும் செய்வர் என நம்பிக்கை பிறப்பதாகவும் நாசர் தனது தெரிவித்துள்ளார்.

Also read... நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கியூட் ஆல்பம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Nadigar Sangam, Udhayanidhi Stalin