மறைந்த மகள் நந்தனாவின் பிறந்த நாளையொட்டி, முன்னணி பாடகி சித்ரா சமூக வலைதளங்களில் உருக்கமான பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி பாடகியாக இருப்பவர் கே.எஸ். சித்ரா. இந்தி சினிமாவிலும் இவர் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாடிவரும் சித்ரா பத்ம விபூஷன், ஃபிலிம் ஃபேர், மாநில அரசுகளின் விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார்.
தற்போது குறைவான பாடல்களை சித்ரா பாடிவந்தாலும், இவரது குரலில் ஹிட்டான பாடல்கள் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
கே.எஸ்.சித்ரா என்ற கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை பூர்வீகமாக கொண்டவர். சித்ராவை சின்னக்குயில், இசைக்குயில் என்று அவரது ரசிகர்கள் அழைக்கின்றனர்.
உலகளவில் ரூ. 1500 கோடி வசூலைத் தாண்டிய அவதார் 2… இந்தியாவிலும் வசூல் வேட்டை
இவர் விஜய் சங்கர் என்பவரை கடந்த 1988-ல் திருமணம் முடித்தார். இந்த தம்பதிக்கு 2002-ஆம் ஆண்டு நந்தனா என்ற பெண்குழந்தை பிறந்தது. இந்நிலையில் 2011 ஆண்டு நந்தனா எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் திரைத் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
WATCH – துணிவு படத்திலிருந்து ‘காசேதான் கடவுளடா’ பாடல்…
இந்நிலையில் நந்தனாவின் பிறந்த நாளான இன்று அவரது தாயார் சித்ரா சமூக வலைதளங்களில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
சித்ரா தனது பதிவில், ‘சொர்க்கத்தில் இன்று தேவதைகளுடன் மகளே நீ பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருப்பாய். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உனது வயது என்றைக்கும் கூடாது. என்னை வீட்டு தூரத்தில் இருந்தாலும் பத்திரமாய் இருப்பாய் என்று எனக்கு தெரியும். இன்றைக்கு கொஞ்சம் கூடுதலாக உன்னை மிஸ் பண்றேன். ஐ லவ் யூ – மிஸ் யூ’ என்று கூறியுள்ளார்.
இந்த பதிவு சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kollywood