ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

32 வருடங்களுக்குப் பிறகு கைகோக்கும் ரஜினி - மணிரத்னம்.. மீண்டும் தளபதி கூட்டணி? விரைவில் அசத்தல் அப்டேட்!

32 வருடங்களுக்குப் பிறகு கைகோக்கும் ரஜினி - மணிரத்னம்.. மீண்டும் தளபதி கூட்டணி? விரைவில் அசத்தல் அப்டேட்!

ரஜினி - மணிரத்னம்

ரஜினி - மணிரத்னம்

மணிரத்னம் ரஜினிக்கு கதை கூறியதாகவும் அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தளபதி படத்திற்கு பிறகு சுமார் 32 வருடங்கள் கழித்து மண்ரத்னம் இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30-ம் தேதி வெளியானது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.  இதனால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதன் காரணமாக ஒவ்வொரு நாளும் வசூல் அதிகரித்து வருகிறது. நேற்றுவரை  உலக அளவில் 400 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

முன்னதாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரஜினி பொன்னியின் செல்வன் படத்தில் தான் பெரிய பழுவேட்டயராக நடிக்க விரும்பியதை தெரிவித்த நிலையில், அதற்கு பதிலளித்த மணிரத்னம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள விரும்பவில்லை என்று மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தளபதி படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடித்ததை பற்றி அந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, அப்போது தளபதியில் நடிக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டேன்.  முதலில் ஆற்றங்கரை ஓரத்தில் ஷோபனாவுடம் இடம்பெறும் பாடலை படமாக்கினார். நான் அணிந்திருந்த உடையை பார்த்து மணிரத்னம், சந்தோஷ் சிவன், சுஹாசினி உள்ளிட்டோர் சீரிஸாக பேசிகொண்டிருதார்கள்.

ஷோபனாவிடம் என்ன பேசிகொள்கிறார்கள் என கேட்டேன். அதற்கு அவர் விளையாட்டாக உங்களை மாற்றிவிட்டு கமல்ஹாசனை போடலாம் என பேசுகிறார்கள் என்றார். அதன்பின் முதல் நாள் என்பதால் உடை பற்றி எதுவும் சொல்லாமல் படமாக்கினார்கள்.

அடுத்த நாள் எப்படி நடித்தாலும் வேண்டாம் என்கிறார். அதிர்ச்சி, சந்தோஷம் என உள்ளிட்டவற்றிற்கு நான் வழக்கமான ஆக்‌ஷன் வைத்துள்ளேன். ஆனால் பீல் பண்ணுங்க  பீல் பண்ணுங்க என்று கூறுகிறார். எனக்கு ஒன்னும் புரியவில்லை. 10 ஷாட் 12 ஷாட் போகிறது. நான் உடனே கமல்ஹாசனுக்கு கால் செய்துகேட்டேன். சிரித்தார் எனக்கு தெரியும் என சொன்னார். அதன் பின் நான் ஒன்று கூறுகிறேன் என ஒரு ஐடியா கொடுத்தார்.

அப்போது மணிரத்னத்தை நடித்துக்காட்ட சொல்லுங்கள், அத கவனிப்பதுப்போல் பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் யோசியுங்கள்,  அதன் பின் நடியுங்கள் என்றார். நானும் தம் அடித்துக்கொண்ட அவர் சொன்னதுபோல் செய்தேன். அதன்பின் நடித்தேன் உடனே ஓகே என சொல்லிவிட்டார். நானும் கமலும் மணிரத்னத்தை ஏமாற்றியுள்ளோம் என நகைச்சுவையாக பேசியிருந்தார்.

Also read... உலகளவில் கொட்டும் வசூல்! அம்மாடியோவ் சொல்லவைக்கும் பொன்னியின் செல்வன் கலெக்‌ஷன்!

இந்நிலையில் மணிரத்னம் ரஜினிக்கு கதை கூறியதாகவும் அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள நிலையில் அதன் பிறக்கு இந்த கூட்டணிக்கான வேலைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ரஜினி - மணிரத்னம் இணையும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Mani ratnam, Rajinikanth