Home /News /entertainment /

அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... சிங்கிளாக வந்து மிரட்டப் போகும் வலிமை

அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... சிங்கிளாக வந்து மிரட்டப் போகும் வலிமை

மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் உலக அளவில் எரிர்பார்ப்பு கொண்ட படங்கள் என்ற அடிப்படையில், ஜனவரி 7-ம்தேதி ஆர்ஆர்ஆர் படமும், ஜனவரி 13-ம்தேதி அஜித்தின் வலிமையும் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    மிகப்பெரும் பட்ஜெட் மற்றும் மாதக்கணக்காக புரொமோஷன் என இந்திய திரையுலகை மிரட்டிய ஆர்ஆர்ஆர் திரைப்படம், ஜனவரி மாதம் வெளியாகாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, பொங்கல் ரேஸில் சோலோவாக அஜித்தின் வலிமை ரிலீஸ் ஆகவுள்ளது.

    இந்திய சினிமாவின் டாப் இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவர் இயக்கிய பாகுபலி படத்திற்கு பின்னர், தெலுங்கு சினிமாவின் புகழ் உலகளவில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. கடைசியாக ராஜமவுலியின் இயக்கத்தில் பாகுபலி 2 திரைப்படம் 2017-ல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.

    இதையும் படிங்க வலிமை ட்ரெய்லரை திரையரங்கில் பார்க்க திரண்ட ரசிகர்கள்!

    இதற்கு பின்னர் ராஜமவுலி என்ன படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் சினிமா ரசிகர்களிடையே காணப்பட்டது. மறுபக்கம் பாகுபலி ஹீரோ பிரபாஸ், சாஹோ என்ற படத்தில் நடிக்க, அந்த திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

    இதன்பின்னர், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரை வைத்து படம் இயக்கப் போவதாக ராஜமவுலி அறிவிக்க, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சுமார் 4 ஆண்டுகால கடும் உழைப்புக்கு பின்னர் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஜனவரி 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க - RRR படம் குறித்த வதந்திக்கு ராஜமௌலி மறுப்பு

    இதையொட்டி, படத்தில் நடித்திருந்த ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு புரொமோஷன் பணிகளை கடந்த ஒரு மாதமாக செய்துவந்தனர். ஒரு படத்திற்கு புரொமோஷன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆர்.ஆர்.ஆர். ஓர் உதாரணம் என்று சினிமா இன்டஸ்ட்ரியில் பேசப்பட்டது. இந்நிலையில், எதிர்பாராத சில காரணங்களால் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் உலக அளவில் எதிர்பார்ப்பு கொண்ட படங்கள் என்ற அடிப்படையில், ஜனவரி 7-ம்தேதி ஆர்ஆர்ஆர் படமும், ஜனவரி 13-ம்தேதி அஜித்தின் வலிமையும் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ஆர்.ஆர்.ஆர். படம் மிகச்சிறப்பாக இருந்தால் அது வலிமையின் வசூலில் சற்று பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சினிமா வல்லுனர்கள் கணித்திருந்தனர். இந்நிலையில் பொங்கல் ரேஸில் இருந்து ஆர்.ஆர்.ஆர் விலகியுள்ளதால், தனிக்காட்டு ராஜாவாக வலிமை களம் காணப் போகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Rajamouli, Valimai

    அடுத்த செய்தி