காரைக்குடியில் விக்ரம் படப்பிடிப்பு - புதிய அப்டேட்!

விஜய் சேதுபதி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்

விக்ரம் படத்தை விரைவில் முடித்து திரையில் வெளியிடுவதே கமலின் திட்டம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
விக்ரம் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடக்கயிருப்பதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆடி மாதம் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக விக்ரம் படப்பிடிப்பு ஆரம்பமானது. லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் சொல்ல, கமல் நடிக்க, க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்தார். சென்னையில் நடந்த முதல்நாள் படப்பிடிப்பில் கமலுடன் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். புஷ்பா படத்தின் ஷுட்டிங்கில் இருந்ததால் பகத் பாசில் கலந்து கொள்ளவில்லை. புஷ்பா ஷுட்டிங் முடிந்த பின் அவர் படப்பிடிப்பில் இணைந்து கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனிருத் இசையில், ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் விக்ரமின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 முதல் காரைக்குடியில் தொடங்குவதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஷெட்யூல்டில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. செப்டம்பர் 2 வரை படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Also read... பொன்னியின் செல்வன் - எம்ஜிஆர் முதல் மணிரத்னம்வரை...!

விக்ரம் படத்தை விரைவில் முடித்து திரையில் வெளியிடுவதே கமலின் திட்டம். மூன்று முன்னணி நட்சத்திரங்கள் இடம்பெறுவதால் படம் முடிவடையும் முன்பே படத்தின் இந்தி டப்பிங் உரிமையை கோல்ட்மைன்ஸ் நிறுவனம் சுமார் 35 கோடிகளுக்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published: