முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரேம்ஜியுடன் கல்யாணமா? பாடகி வினைதா விளக்கம்

பிரேம்ஜியுடன் கல்யாணமா? பாடகி வினைதா விளக்கம்

வினைதா

வினைதா

நடிகர் பிரேம்ஜியும், பாடகி  வினைதாவும் விரைவில் திருமணம் செய்யப் போவதாக சில தினங்கள் முன்பு மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது.

  • Last Updated :

பிரேம்ஜியை திருமணம் செய்யப் போவதில்லை என்று பாடகி வினைதா கூறியிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

நடிகர் பிரேம்ஜியும், பாடகி  வினைதாவும் விரைவில் திருமணம் செய்யப் போவதாக சில தினங்கள் முன்பு மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு காரணமாக அமைந்தது இருவரும் இணைந்திருக்கும் புகைப்படமும், அதில் பிரேம்ஜி குறிப்பிட்டிருந்த காதல் வசனங்களும்தான்.

அதனை வைத்து பிரேம்ஜி பாடகி வினைதாவை திருமணம் செய்ய இருப்பதாக திரையுலகமும், வெளியுலகம் பரபரப்பானது. ஆனால் இதனை வினைதா மறுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"பிரேம்ஜியும் நானும் பல வருட கால நண்பர்கள். எங்களின் புகைப்படங்களை அவ்வப்போது இப்படி பகிர்ந்து கொள்வதுண்டு. அப்படியே பகிர்ந்து கொள்ளும்போது சிலவற்றை தமாஷாக எழுதிக் கொள்வோம். அப்படித்தான் பிரேம்ஜியும் எழுதி இருந்தார். அதை வைத்து திருமணம் என்பதெல்லாம் அதிகம். நான் திருமணம் செய்துகொள்வேன். ஆனால் பிரேம்ஜியை அல்ல" என்று அவர் கூறியிருக்கிறார்.

பிரேம்ஜி அமரனுக்கு இப்போது வயது 42 ஆகிறது.  இன்னும் குரோனிக் பேச்சிலர் ஆகவே இருந்து வருகிறார். தனது அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் அவ்வப்போது தலை காட்டுவதோடு சரி. அப்படி நடிக்காத படங்களில் இசையமைக்கிறார்.

Also read... சண்டை காட்சியில் கையை உடைத்துக் கொண்ட விஷால் - படப்பிடிப்பு ரத்து

வெங்கட் பிரபுவின் புதிய படம் மன்மதலீலையில்  பிரேம்ஜிதான் இசை. இவருக்கு அவரது வீட்டார் தீவிரமாக பெண் பார்த்து வரும் நிலையில் இப்போது வினைதாவும் அவரை திருமணம் செய்யப் போவதில்லை என்று கூறியிருக்கிறார். ஆக, பிரேம்ஜியின் குரோனிக் பேச்சிலர் வாழ்க்கை முடிவுறாமல் இந்த வருடமும் தொடரும் என்றே தோன்றுகிறது.

First published:

Tags: Actor premji