• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • படமாகும் கிரிக்கெட் தாதா கங்குலியின் வாழ்க்கை வரலாறு...!

படமாகும் கிரிக்கெட் தாதா கங்குலியின் வாழ்க்கை வரலாறு...!

கங்குலி

கங்குலி

கங்குலியின் வாழ்க்கை வரலாறை எடுக்கயிருப்பதாக லவ் ஃபிலிம்ஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இது வாழ்க்கை வரலாறுகளின் காலம். விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், சரித்திர நாயகர்களின் வாழ்க்கை வரலாறுகள் தொடர்ச்சியாக படமாகின்றன. அதிலும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுக்கு தனி மவுசு. டோனி, சச்சின் வாழ்க்கை வரலாறுகள் படமாக வெளிவந்துள்ளன. கபில்தேவ், பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோரின் பயோபிக்குகள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில், கிரிக்கெட் உலகில் தாதா என்று செல்லமாக அழைக்கப்படும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கங்குலி ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரர். அவர் மைதானத்தில் இருந்தால் சுவாரஸியத்துக்கு பஞ்சமிருக்காது. இரண்டு பந்துகள் அடிக்க முடியாமல் முடியாமல் போனால் மூன்றாவது பந்துக்கு பிட்சில் ஏறி அடிப்பார் என்பது சின்னக்குழந்தைகளுக்கும் தெரிந்த ரகசியம். 2002 இல் அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது, நாட்வெஸ்ட் சர்வதேச ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. அன்று லாட்ஸ் மைதானத்தில் கங்குலி சட்டையை கழற்றி வெற்றியை கொண்டாடியது எந்த கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாத நிகழ்வு

Also read... பிரபல நடிகைக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் கைது வாரண்ட்...!

கங்குலியின் வாழ்க்கை வரலாறை எடுக்கயிருப்பதாக லவ் ஃபிலிம்ஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கங்குலியின் வேடத்தில் முன்னணி நடிகரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் அதிகபடியான தகவல்களுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவர உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: