மகள் திருமணத்தில் மனைவி முன்பு டான்ஸ் ஆடி அசத்திய ரஜினிகாந்த் - வீடியோ

மணமக்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களோடு முத்து பட பாடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நடனமாடியுள்ளார்.

மகள் திருமணத்தில் மனைவி முன்பு டான்ஸ் ஆடி அசத்திய ரஜினிகாந்த் - வீடியோ
நடிகர் ரஜினிகாந்த்
  • News18
  • Last Updated: February 10, 2019, 1:26 PM IST
  • Share this:
மணமக்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களோடு ரஜினிகாந்த் நடனம் ஆடும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என்று 2 மகள்கள் இருக்கின்றனர். நடிகர் தனுசை ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ஐஸ்வர்யாவும் திரைப்படத்துறையில் இருக்கிறார்.

பல படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றி வந்த சவுந்தரியா, வெங்கட் பிரபு இயக்கிய கோவா படத்தை தயாரித்தார். ரஜினி நடித்த கோச்சடையான் அனிமேஷன் படத்தையும் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி-2 படத்தையும் இயக்கியுள்ளார். இவருக்கும் தொழில் அதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார்.


இந்த நிலையில் சவுந்தர்யா-அஸ்வின் இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 2 வருடங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன் பிறகு மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

சவுந்தர்யா திருமண வரவேற்பில் தனுஷ் ஏன் ஆர்வம் காட்டவில்லை தெரியுமா?

சவுந்தர்யாவுக்கு தற்போது விசாகன் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது. விசாகன் அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்தவர். ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள விசாகன், படத்தயாரிப்பு நிறுவனமும் நடத்துகிறார்.

நாளை இவர்களது திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களோடு முத்து பட பாடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வடிவேலுவின் பேட்ட - கதையல்ல வரலாறு - வீடியோ

First published: February 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்