நடிகர் விசாகனை திருமணம் செய்கிறாரா சௌந்தர்யா ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்தின் 2 - வது திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விசாகனை திருமணம் செய்கிறாரா சௌந்தர்யா ரஜினிகாந்த்?
சௌந்தர்யா ரஜினிகாந்த்
  • News18
  • Last Updated: November 15, 2018, 5:22 PM IST
  • Share this:
நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்தின் 2 - வது திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் கடந்த 2010-ம் ஆண்டு தொழிலதிபர் அஷ்வினைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு வேத் என்கிற மகன் உண்டு. சௌந்தர்யா - அஸ்வின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியிருந்தனர். பிறகு இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.

தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கோவை முன்னாள் எம்.எல்.ஏ பொன்முடியின் சகோதரரும், தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகன். வஞ்சகர் உலகம் படத்தில் நடித்திருக்கும் இவர் அடுத்ததாக சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவருடன் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விசாகனுக்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தாகியுள்ளது. அமெரிக்காவில் எம்பிஏ படித்திருக்கும் இவர் தமிழ்நாட்டில் மருந்துகள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

நிச்சயதார்த்தத்தை அடுத்து ஜனவரி மாதத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சௌந்தர்யா விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கோலிவுட்டில் என்ன நடக்கிறது? தெரிஞ்சுக்க கிளிக் செய்க

பார்க்க:
கமல்ஹாசனின் மய்ய அரசியல் - கதையல்ல வரலாறு - வீடியோ


First published: November 13, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading