ரஜினிகாந்தின் மகள் சவுந்தரியாவுக்கு அடுத்தமாதம் திருமணம்...!

விசாகன் அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்தவர். ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள விசாகன், படத்தயாரிப்பு நிறுவனமும் நடத்துகிறார்.

news18
Updated: January 23, 2019, 1:23 PM IST
ரஜினிகாந்தின் மகள் சவுந்தரியாவுக்கு அடுத்தமாதம் திருமணம்...!
சவுந்தர்யா - விசாகன்
news18
Updated: January 23, 2019, 1:23 PM IST
நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தரியாவுக்கு அடுத்த மாதம் 11-ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என்று 2 மகள்கள் இருக்கின்றனர். நடிகர் தனுசை ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ஐஸ்வர்யாவும் திரைப்படத்துறையில் இருக்கிறார்.

பல படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றி வந்த சவுந்தரியா வெங்கட் பிரபு இயக்கிய கோவா படத்தை தயாரித்தார். ரஜினி நடித்த கோச்சடையான் அனிமேஷன் படத்தையும் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி-2 படத்தையும் இயக்கியுள்ளார்.

இவருக்கும் தொழில் அதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் சவுந்தர்யா-அஸ்வின் இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 2 வருடங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன் பிறகு மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் சவுந்தர்யாவுக்கு தற்போது விசாகன் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது. விசாகன் அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்தவர். ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள விசாகன், படத்தயாரிப்பு நிறுவனமும் நடத்துகிறார்.

சவுந்தர்யா-விசாகன் திருமண நிச்சயதார்த்தம் இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இவர்கள் திருமணம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ம் தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் எளிமையாக நடக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொள்கின்றனர்.

Also See..

First published: January 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...