• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’மீண்டும் அப்பாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்’ - சிவாவுக்கு செளந்தர்யா ரஜினிகாந்த் வேண்டுகோள்

’மீண்டும் அப்பாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்’ - சிவாவுக்கு செளந்தர்யா ரஜினிகாந்த் வேண்டுகோள்

ரஜினிகாந்த் - செளந்தர்யா

ரஜினிகாந்த் - செளந்தர்யா

மீண்டும் இயக்குநர் சிவாவும் ரஜினிகாந்தும் இணைந்து பணியாற்ற வேண்டுமென செளந்தர்யா ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ’அண்ணாத்த’ படத்தைப் பார்த்து இயக்குநர் சிவாவின் கையை பிடித்து அழுததாக செளந்தர்யா ரஜினிகாந்த் ஹூட் ஆப்பில் தெரிவித்துள்ளார்.

    இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

    சிவா இயக்கத்தில் வெளியான வீரம், விஸ்வாசம் போன்று கூட்டு குடும்பப் பின்னணியில் அண்ணாத்த தயாராகிறது. அண்ணன் - தங்கை பாசம் படத்தில் பிரதானமாக இருக்கும் என்கிறது படக்குழு. முன்னதாக அண்ணத்த படத்தில் இடம்பெற்றுள்ள, ‘அண்ணாத்த அண்ணாத்த’, ‘சாரல் காற்றே’, ’மருதாணி’, ‘வா சாமி’ ஆகிய பாடல்களும், படத்தின் டீசரும், ட்ரைலரும் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

    இதையடுத்து அண்ணாத்த படம் தீபாவளியை முன்னிட்டு, வரும் நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது. இதற்கிடையே தனது குடும்பத்தினருடன் படம் பார்த்த ரஜினி, இது குறித்த பதிவொன்றை ஹூட் ஆப்பில் பகிர்ந்திருந்தார்.



    இந்நிலையில் படத்தைப் பார்த்த செளந்தர்யா ரஜினிகாந்த், இயக்குநர் சிவாவை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள குரல் பதிவில், ”அண்ணாத்த படத்தில் நீங்கள் செய்துள்ள மேஜிக். படத்தைப் பார்த்துவிட்டு கண்ணீரோடு உங்க கையை பிடிச்சு நன்றி சொன்னேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தலைவருடைய வெறித்தனமான ரசிகை என்ற முறையிலும், அவரது மகள் என்ற முறையிலும் கூறுகிறேன். நீங்கள் அப்பாவுடன் மீண்டும் இணைந்து பனியாற்ற வேண்டும்” என மனம் நெகிழ்ந்து கூறியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: