Home /News /entertainment /

சினிமாவில் 47 ஆண்டுகளைக் கடந்த ரஜினிகாந்த்... செளந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட ஸ்பெஷல் புகைப்படம்!

சினிமாவில் 47 ஆண்டுகளைக் கடந்த ரஜினிகாந்த்... செளந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட ஸ்பெஷல் புகைப்படம்!

லதா ரஜினிகாந்த்

லதா ரஜினிகாந்த்

47 years of Rajinism: இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன் முதலில் நடித்த அபூர்வ ராகங்கள் படம் 1975-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    Superstar Rajinikanth: ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்து 47 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், அவரது இளையமகள் செளந்தர்யா வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    ரஜினி.. இந்த மூன்றெழுத்துக்கு ரசிகர்களிடம் இருக்கும் வசீகரம், காலம் கடந்து இன்றும் துளியும் குறையவில்லை. ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிக்கிடந்த தமிழ் சினிமாவின் வணிக எல்லையை, உலகளவில் விரிவுபடுத்தியதில் ரஜினி படங்களுக்கு பெரும்பங்குண்டு.

    குறிப்பாக கருப்பு வெள்ளை காலத்தில் களம் கண்ட ரஜினி, ஈஸ்ட்மென் கலர், டிஜிட்டல், அனிமேஷன், 3டி என நான்கு வெவ்வேறு தொழில்நுட்பத்திலும் நடித்துவிட்டார். இது இந்திய அளவில் வேறெந்த நடிகருக்கும் கிடைக்காத மிகப்பெரிய கௌரவம்.



    ஒரு பக்கம் வசூல் சாதனைகள் என்றால் இன்னொரு பக்கம் கலைமாமணி தொடங்கி பத்மவிபூஷன் வரை எண்ணற்ற உயரிய விருதுகளையும் ரஜினிகாந்த் கைப்பற்றியுள்ளார். 1978-ல் முதல்முறையாக ’முள்ளும் மலரும்’ படத்திற்காக தமிழக அரசின் சிறப்பு விருதை பெற்ற ரஜினிகாந்த், தொடர்ந்து ’மூன்று முகம்’, ’முத்து’, ’படையப்பா’, ’சந்திரமுகி’, ’சிவாஜி’ என 6 முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். அதோடு இந்திய அரசால் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை கடந்த வருடம் பெற்றார் ரஜினிகாந்த்.

    வில்லனாக களம் இறங்கும் காமெடி நடிகர் மதன் பாப்!

    இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன் முதலில் நடித்த அபூர்வ ராகங்கள் படம் 1975-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது. அதன்படி ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்து நேற்றோடு 47 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.



    இந்நிலையில் தனது அப்பா ரஜினிகாந்த் மற்றும் அம்மா லதா ரஜினிகாந்த் இணைந்திருக்கும் படத்தை வெளியிட்டிருக்கும் செளந்தர்யா ரஜினிகாந்த், "எங்கள் அன்பான ஜில்லுமா.. அப்பாவின் மிகப்பெரிய ரசிகை, எங்கள் குடும்பத்தின் சூப்பர் ஸ்டார்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தவிர, தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajinikanth, Soundarya Rajinikanth

    அடுத்த செய்தி