தண்ணீர் தட்டுப்பாடு: நீச்சல் குள புகைப்படத்தை நீக்கிய சவுந்தர்யா ரஜினிகாந்த்!

news18
Updated: June 30, 2019, 4:04 PM IST
தண்ணீர் தட்டுப்பாடு: நீச்சல் குள புகைப்படத்தை நீக்கிய சவுந்தர்யா ரஜினிகாந்த்!
சௌந்தர்யா ரஜினிகாந்த்
news18
Updated: June 30, 2019, 4:04 PM IST

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தான் சமூகவலைதள பக்கத்தில் தான் பதிவிட்ட புகைப்படத்தை நீக்கியுள்ளார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.


தயாரிப்பாளரும், இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், கடந்த பிப்ரவரி மாதத்தில் விசாகனை திருமணம் செய்து கொண்டார். தற்போது பொன்னியின் செல்வன் நாவலை வெப் சீரிஸாக எடுக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வரும் அவர் தனது மகன் வேத் புகைப்படங்களை அவ்வப்போது பதிவேற்றுவார். சமீபத்தில் கூட ரஜினியின் ஸ்டைலில் மகன் வேத் நின்ற புகைப்படம் ஒன்றை பதிவு செய்தார்.தற்போது தனது மகன் வேத் நீச்சல் பழகி வருவது குறித்து ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்த அவர், குழந்தைகளுக்கு இளம் வயதில் நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும், நீச்சல் என்பது ஒவ்வொருவரும் பழகிக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் என்றும், பெற்றோர்கள் குழந்தைகளை விட்டு விலகாது அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறி நீச்சல் கற்றுக் கொடுக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.இந்த புகைப்படங்களுக்கு விமர்சனங்கள் எழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியிருக்கும் சவுந்தர்யா ரஜினிகாந்த், தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழ்நிலையால் நான் பதிவிட்ட புகைப்படங்களை நீக்கியுள்ளேன். குழந்தைகள் உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தை கூறவே அந்த புகைப்படங்களை பதிவிட்டேன்” என்றும் கூறியுள்ளார்.வீடியோ பார்க்க: நாயகிகள் ஜெயித்த கதை!

First published: June 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...