ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Varisu: விஜய்யின் வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் Soul Of Varisu வெளியீடு!

Varisu: விஜய்யின் வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் Soul Of Varisu வெளியீடு!

வாரிசு பாடல்

வாரிசு பாடல்

Soul Of Varisu என்ற அந்தப் பாடலை பிரபல பாடகி சித்ரா பாடியிருக்கிறார். பாடலாசிரியர் விவேக் அதனை எழுதியிருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி ஆகியப் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து படத்தின் ஆடியோ லாஞ்ச் பிரமாண்ட விழாவாக வரும் டிசம்பர் 24-ம் தேதி நடைப்பெறுவதாக பேச்சுகள் வலம் வருகின்றன. இந்நிலையில் வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. Soul Of Varisu என்ற அந்தப் பாடலை பிரபல பாடகி சித்ரா பாடியிருக்கிறார். பாடலாசிரியர் விவேக் அதனை எழுதியிருக்கிறார்.

பிரபல நடிகை தனது கசின் சிஸ்டர் என்பதை 40 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறிந்த வனிதா விஜயகுமார்!

' isDesktop="true" id="859101" youtubeid="RbQgF_vocLU" category="cinema">

முன்னதாக ’ஆராரிராரிரோ கேட்குதம்மா’ எனத் தொடங்கும் அப்பாடலின் ப்ரோமோ இன்று காலை வெளியானது. இதையடுத்து தற்போது முழு பாடலும் வெளியாகியிருக்கிறது. விஜய்யின் மற்ற பாடல்களைப் போல இதுவும் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay