முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆராரிராரோ....! விஜய்யின் வாரிசு படத்திலிருந்து சித்ரா பாடிய அம்மா பாடல் ப்ரோமோ இதோ!

ஆராரிராரோ....! விஜய்யின் வாரிசு படத்திலிருந்து சித்ரா பாடிய அம்மா பாடல் ப்ரோமோ இதோ!

பாடகி சித்ரா - நடிகர் விஜய்

பாடகி சித்ரா - நடிகர் விஜய்

விஜய்க்கு ஃபேமிலி ஆடியன்ஸின் பலம் இருப்பதால் இந்தப் படம் அவர்களை வெகுவாக கவர வாய்ப்பிருக்கிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்திலிருந்து ரஞ்சிதமே, தீ தளபதி போன்ற பாடல்கள் வெளியாகி ரீல்ஸ், போஸ்ட் என சமூக வலைதளங்களைக் கலக்கிக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இப்படத்திலிருந்து சோல் ஆஃப் வாரிசு என்ற அம்மா பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இதனை முன்னிட்டு இப்பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இப்பாடலை சித்ரா பாடியுள்ளார்.

விஸ்வாசம் படத்துக்கு கண்ணான கண்ணே பாடல் எப்படி ஹைலைட்டாக அமைந்ததோ, குடும்ப சென்டிமென்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள வாரிசு படத்துக்கு அம்மா பாடல் பக்கபலமாக அமையும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க | அஜித் வீடு கட்டித்தருகிறார்.. பக்கா ப்ளான் செய்து மோசடி செய்த நபர்.. நெல்லையில் பரபர சம்பவம்!

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க சரத்குமார், குஷ்பு, சங்கீதா, ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், கணேஷ் வெங்கட் ராம் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். விஜய்க்கு ஃபேமிலி ஆடியன்ஸின் பலம் இருப்பதால் இந்தப் படம் அவர்களை வெகுவாக கவர வாய்ப்பிருக்கிறது.

தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் அங்கே பொங்கல்/சங்கராந்தியை முன்னிட்டு சிரஞ்சீவியின் 'வால்டர் வீரய்யா' படமும், பாலகிருஷ்ணாவின் 'வீர சிம்ம ரெட்டி' படமும் போட்டியில் இருக்கின்றன. தமிழில் அஜித்தின் 'துணிவு' படமும் பொங்கலுக்கு வாரிசுடன் மோதுகிறது. இதனால் தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் போட்டிகளை வாரிசு படம் எப்படி சமாளிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay, Actress Rashmika Mandanna