Home /News /entertainment /

விறுவிறுப்பாக நடைபெறும் வெற்றி மாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பு… ஃபோட்டோஸ் பகிர்ந்த விஜய் சேதுபதி

விறுவிறுப்பாக நடைபெறும் வெற்றி மாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பு… ஃபோட்டோஸ் பகிர்ந்த விஜய் சேதுபதி

விடுதலை படத்தில் விஜய் சேதுபதி

விடுதலை படத்தில் விஜய் சேதுபதி

வழக்கமாக காமெடி கேரக்டர்களுக்கு பெயர்போன சூரி, இந்த படத்தில் சீரியஸான காவலராக நடித்துள்ளார்.

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்களை நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

வடசென்னை, அசுரன் படங்களின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் வெற்றி மாறன் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி, கவுதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.

விடுதலை படத்தின் முக்கிய காட்சிகள் சத்தியமங்கலம் வனப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. வழக்கமாக காமெடி கேரக்டர்களுக்கு பெயர்போன சூரி, இந்த படத்தில் சீரியஸான காவலராக நடித்துள்ளார். விஜய் சேதுபதியும் படத்தில் இடம்பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதன்முறையாக விஜய் சேதுபதியும், வெற்றிமாறனும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

இதையும் படிங்க - ஓடிடியில் 200-வது நாள்… புதிய போஸ்டரை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜெய்பீம் படக்குழு

விடுதலை படத்தின் ஷூட்டிங் தொடர்ச்சியாக நடைபெறாமல் பகுதிபகுதியாக நடத்தப்பட்டு வந்ததால் சுமார் 2 ஆண்டுகளாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க - துபாயில் படக்குழுவினருடன் ஓய்வெடுக்கும் பீஸ்ட் இயக்குனர் நெல்சன்… வைரலாகும் புகைப்படம்

சமீபத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங்கில் இயக்குனர் வெற்றி மாறன் பங்கேற்றார். இந்நிலையில் மீண்டும் விடுதலை படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்களை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



விக்ரம் படத்தில் முக்கிய வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் 3ம் தேதி திரைக்கு வருகிறது. வெற்றி மாறன் இயக்கி வரும் சூர்யா நடிக்கும் வாடிவாசல், தமிழ்சினிமாவின் முக்கிய திரைப்படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Published by:Musthak
First published:

Tags: Actor Soori, Actor Vijay Sethupathi, Director vetrimaran

அடுத்த செய்தி