முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சொந்த ஊரில் பொதுமக்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடிய சூரி!

சொந்த ஊரில் பொதுமக்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடிய சூரி!

சூரி

சூரி

ஆயிரம் கோயில் கட்டுவதைவிட ஏழை ஒருவரை படிக்க வைப்பது மேலானது என்று கூறிய சூரியின் கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் சூரி தனது சொந்த ஊர் கோயில் திருவிழாவில் பொது மக்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் சூரி. இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து செய்த காமெடிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. தற்போது சூரி விருமன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இயக்குநர் முத்தையா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாகவும், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் விருமன் படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைப்பெற்றது. அதில் பேசிய சூரி, விருமன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி என்றார். பின்னர் சூர்யாவைப் பாராட்டும்போது, ஆயிரம் கோயில் கட்டுவதைவிட ஏழை ஒருவரை படிக்க வைப்பது மேலானது என்று கூறினார். அவரின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையானது.

மீனா, ரம்பா உள்ளிட்ட 90’ஸ் நடிகைகளுக்கு பார்ட்டி வைத்த பிரபுதேவா!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் இதற்கு விளக்கமளித்த சூரி, “நான் கோயில்களுக்கு எதிரானவன் அல்ல. நான் தீவிர மதுரை மீனாட்சி அம்மன் பக்தன். நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. யார் மனதையும் புண்படுத்துவதற்காக இதை சொல்லவில்லை” என்றார்.

' isDesktop="true" id="784260" youtubeid="xWR0asm_kQA" category="cinema">

இந்நிலையில் தனது சொந்த ஊரான, மதுரை மாவட்டம் ராசாக்கூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பொதுமக்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடியுள்ளார் சூரி. தற்போது அந்த வீடியோ கவனம் ஈர்த்து வருகிறது.

First published:

Tags: Actor Soori