• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'எதற்கும் துணிந்தவன்' சூர்யாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய சூரி!

'எதற்கும் துணிந்தவன்' சூர்யாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய சூரி!

சூரி பிறந்தநாள் கொண்டாட்டம்

சூரி பிறந்தநாள் கொண்டாட்டம்

சூரியை ஹீரோவாக்கி படம் இயக்கவும், தயாரிக்கவும் கோடம்பாக்கத்தில் இரண்டு டஜன் பேர் சூரி பின்னால் சுற்றுகிறார்கள். விடுதலையின் வெளியீட்டுக்காக சூரி அட்வான்ஸ் வாங்காமல் அமைதி காக்கிறார்.

  • Share this:
    ஆகஸ்ட் 28 சூரியின் பிறந்தநாள். குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினரின் வாழ்த்து மழையில் நனைந்தவர், நேற்று எதற்கும்  துணிந்தவன் படப்பிடிப்புத்தளத்தில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    சினிமாவில் கடை நிலை வேலைகள் செய்து வந்த சூரி, வெண்ணிலா கபடி குழுவில் முதல்முறையாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். படிப்படியாக முன்னேறி இன்று வெற்றிமாறனின் விடுதலை படத்தில் கதை நாயகனாக நடித்து வருகிறார். சூரியை ஹீரோவாக்கி படம் இயக்கவும், தயாரிக்கவும் கோடம்பாக்கத்தில் இரண்டு டஜன் பேர் சூரி பின்னால் சுற்றுகிறார்கள். விடுதலையின் வெளியீட்டுக்காக சூரி அட்வான்ஸ் வாங்காமல் அமைதி காக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஹீரோவாக நடிப்பது, முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடிப்பது என இந்த வருட பிறந்தநாள் சூரிக்கு ரொம்பவே ஸ்பெஷல். பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வீடியோவும் வெளியிட்டு சக நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் வாழ்த்துகளையும் பெற்றார். நேற்று எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்புத்தளத்தில் சூரியின் பிறந்தநாளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சூர்யா, பாண்டிராஜ், சத்யராஜ் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் சூரி கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    எதற்கும் துணிந்தவனில் நாயகி ப்ரியங்கா அருள் மோகனின் முறை மாமனாக சூரி நடிக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: