வித்தியாசமான லுக்கில் சூர்யா... சூரரைப்போற்று ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

வித்தியாசமான லுக்கில் சூர்யா... சூரரைப்போற்று ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்
சூரரைப் போற்று ஃபர்ஸ்ட் லுக்
  • News18
  • Last Updated: November 10, 2019, 4:07 PM IST
  • Share this:
சூரரைப் போற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

என்.ஜி.கே, காப்பான் படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்துள்ளார்.


ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் படம் அடுத்த ஆண்டு கோடைவிடுமுறைக்கு திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். சூரரைப்போற்று ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ள நிலையில் #SooraraiPottruFirstLook என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர் சூர்யாவின் ரசிகர்கள்.


இறுதிச் சுற்று படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா இணைந்திருப்பதால் சூரரைப் போற்று படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
First published: November 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்