Soorarai Pottru: தடுப்பூசி போட்டுக் கொண்ட ‘சூரரைப்போற்று’ வில்லனுக்கு கொரோனா

Soorarai Pottru: தடுப்பூசி போட்டுக் கொண்ட ‘சூரரைப்போற்று’ வில்லனுக்கு கொரோனா

பரேஷ் ராவல்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சில வாரங்களில், அத்தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார் சூரரைப்போற்று பட வில்லன் நடிகர் பரேஷ் ராவல்.

  • Share this:
    கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சில வாரங்களில், அத்தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார் சூரரைப்போற்று பட வில்லன் நடிகர் பரேஷ் ராவல்.

    நடிகரும் அரசியல்வாதியுமான பரேஷ் ராவல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக் கொண்ட 65 வயதான இவர், சில வாரங்களில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. "துரதிர்ஷ்டவசமாக, நான் COVID-19க்கு நேர்மறை சோதனை செய்துள்ளேன்" என ட்விட்டரில் அவர் தெரிவித்திருந்தார். அதோடு சமீபத்திய நாட்களில் தன்னிடம் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை சோதித்துப் பார்க்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.



    Cook With Comali: வைல்ட் கார்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 2 பிரபலங்கள்!

    மார்ச் 9 அன்று, பரேஷ் ராவல் தனது முதல் தடுப்பூசி டோஸை போட்டுக் கொண்டார். தான் தடுப்பூசி போட்டுக் கொண்டதை ட்விட்டரில் தெரிவித்த அவர், அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், முன்னணி சுகாதார பணியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.



    சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தாரே அவர் தான் இந்த பரேஷ் ராவல். தடுப்பூசி போட்டுக் கொண்ட சில வாரங்களில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: