சர்ப்ரைஸ் இருக்கு... சூரரைப்போற்று அப்டேட் கொடுத்த முக்கிய பிரபலங்கள்

சூர்யாவின் பிறந்தநாள் அன்று சூரரைப்போற்று படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

சர்ப்ரைஸ் இருக்கு... சூரரைப்போற்று அப்டேட் கொடுத்த முக்கிய பிரபலங்கள்
சூரரைப்போற்று சூர்யா
  • Share this:
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

இந்நிலையில் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் பாண்டியன், வரும் ஜூலை 23-ம் தேதி சூர்யாவின் பிறந்தநாளன்று ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதேபோல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், “சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூரரைப்போற்று குழுவில் இருந்து ஏதோ ஒரு ஸ்பெஷலான அப்டேட் வர இருக்கிறது. வரும் நாட்களில் அது என்ன என்ற விவரம் தெரியும்” என்று கூறியுள்ளார்.








கோடை விடுமுறைக்கு திரைக்கு வர வேண்டிய சூரரைப்போற்று திரைப்படம் கொரோனா ஊரடங்கால் வெளிவரவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு வெளியிட்டிருந்த வீடியோவில் சூர்யா 19 வயது கதாபாத்திரத்துக்காக கடின உடற்பயிற்சி செய்வது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading