ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி.. அபர்ணா பாலமுரளி நியூஸ் 18 தமிழுக்கு பேட்டி!

சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி.. அபர்ணா பாலமுரளி நியூஸ் 18 தமிழுக்கு பேட்டி!

அபர்ணா பாலமுரளி

அபர்ணா பாலமுரளி

” சுதா, நடிகர் சூர்யா மற்றும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் ஆகியோருக்கும் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தேசிய விருது முற்றிலும் எதிர்பாராதது என சூரரைப் போற்று படத்தில் நடித்த நடிகை அபர்ணா பாலமுரளி தெரிவித்துள்ளார். நியூஸ் 18 தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில் இதுக் குறித்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது . நடிகர் சூர்யா இத்திரைப்படத்தை தயாரித்து இருந்த்தார். திரைப்படத்தின் கதாநாயகனாக சூர்யா மற்றும் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளனர்.

நேற்றைய தினம் 68 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தனுஷ், அக்சய் குமார் உள்பட பிரபலங்களின் பாராட்டு மழையில் சூரரைப் போற்று படக்குழு...

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் பொள்ளாச்சி அருகே படப்பிடிப்பின் இருந்த அபர்ணா பாலமுரளி நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்ய பேட்டியின் போது, தேசிய விருது முற்றிலும் எதிர்பாராதது, இந்த விருது எனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நாள் எனக்கு மிக்பெரிய நாள் எனவும் கூறினார்..

தேசிய விருதுகளை குவித்த 'சூரைப்போற்று' பொம்மியின் சூப்பர் புகைப்படங்கள்

' isDesktop="true" id="775894" youtubeid="bN8G2nYkg-0" category="cinema">

மேலும் இந்த விருது எனக்கு கிடைக்க உறுதுணையாக இருந்த இயக்குனர் சுதா, நடிகர் சூர்யா மற்றும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் ஆகியோருக்கும் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Surya, Kollywood, National award, Soorarai Pottru, Tamil Cinema