• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இந்தியில் தயாராகிறது சூரரைப்போற்று திரைப்படம் - கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் தகவல்

இந்தியில் தயாராகிறது சூரரைப்போற்று திரைப்படம் - கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் தகவல்

சூரரை போற்று

சூரரை போற்று

சூரரைப்போற்று படம் அடுத்தாண்டு இந்தியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் கூறியுள்ளார்.

  • Share this:
ஏர் டெக்கன் என்ற விமான நிறுவனத்தை உருவாக்கிய கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறே தமிழில் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று என்ற பெயரில் படமாக தயாராகியுள்ளது. இப்படம் வரும் 12ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.

கோபிநாத் எழுதிய simply fly என்ற புத்தகத்தை படித்த பிறகே தயாரிப்பாளர் குனீத் மோங்கா இதனை படமாக எடுக்க முடிவு செய்ததாக கோபிநாத் கூறியுள்ளார்.



கர்நாடக மாநிலம் ஹசனா மாவட்டம் கோரூரு என்ற கிராமத்தில் பிறந்த கோபிநாத், இந்தியா பாகிஸ்தான் போரில் விமானப்படையில் பணியாற்றியவர்.

2003ல் அவர் உருவாக்கிய ஏர்டெக்கன் நிறுவனம் பற்றிய நிஜ கதையில் சூர்யா நாயகனாகவும், அபர்ணா பாலமுரளி ஆகியோரும் நடிக்கின்றனர். சுதா கொங்கரா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்தநிலையில், நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த கேப்டன் ஜி.ஆர் கோபிநாத், ‘சூரரைப்போற்று படம் அடுத்தாண்டு இந்தியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: