சூரரைப் போற்று ‘மாறா’ தீம் ரிலீஸ் எப்போது? - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூரரைப் போற்று  ‘மாறா’ தீம் ரிலீஸ் எப்போது? - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சூரரைப் போற்று செகண்ட் லுக்
  • Share this:
சூரரைப் போற்று படத்தில் சூர்யா பாடியுள்ள மாறா தீம் பாடலின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

காப்பான் படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.


இந்நிலையில் இந்தப் படத்தில் சூர்யா பாடியுள்ள மாறா என்ற தீம் பாடல் இந்த வாரத்தில் வெளியாகும் என்று படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், சூர்யா பாடும் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சூர்யாவின் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.



சூரரைப் போற்று திரைப்படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Exclusive | பாண்டிராஜ் தான் ‘தளபதி 65’ இயக்குநரா? - விஜய் தரப்பு விளக்கம்!
First published: January 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading