Home /News /entertainment /

'சூரரைப் போற்று’ இந்தி ரீமேக் ஷூட்டிங் தொடங்கியது… பாலிவுட்டில் சூர்யா

'சூரரைப் போற்று’ இந்தி ரீமேக் ஷூட்டிங் தொடங்கியது… பாலிவுட்டில் சூர்யா

சூர்யா - அக்சய் குமார்

சூர்யா - அக்சய் குமார்

இந்தியில் சூரரைப் போற்று படத்தை தயாரிப்பதன் மூலம் பாலிவுட்டில் சூர்யா தயாரிப்பாளராக அடியெடுத்து வைக்கிறார்.

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் மெகா ஹிட்டான சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இதனை பிரபல தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ராவுடன் இணைந்து சூர்யாவின்2டி நிறுவனம் தயாரிக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தில் அக்சய் குமார், நடிகை ராதிகா மதன் ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடிக்கின்றனர். 2020-ல் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் மெகா ஹிட்டானது.

தியேட்டர் எக்ஸ்பீரின்ஸ் படமான சூரரைப் போற்று, கொரோனா பரவலால் துரதிருஷ்டவசமாக அமேசான் ஓடிடியில் வெளியானது. இருப்பினும் ரசிகர்கள் இந்த படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பை அளித்தனர்.

இதையும் படிங்க - KGF 2 Collection: 900 கோடிக்கும் மேல் வசூலித்த யாஷின் கே.ஜி.எஃப் 2!

ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா சிறப்பாக உருவாக்கியிருப்பார். இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனான படங்களில் ஒன்றாக கருதப்படும் சூரரைப் போற்று, தற்போது இந்தியில் உருவாகி வருகிறது. படத்தின் பூஜை மற்றும் ஷூட்டிங் காட்சியை ஹீரோ அக்சய் குமார் ட்விட்டரில் வெளியிட்டார்.



முன்னதாக பூஜையில் பங்கேற்பதற்காக சூர்யா நேற்று மும்பை சென்றார். இதுதொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகின. சூரரைப் போற்று இந்தி ரீமேக் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சூர்யா, உங்களின் அன்பும் ஆசிர்வாதமும் எப்போதும் தேவை என்று கூறியுள்ளார்.



இந்தியில் சூரரைப் போற்று படத்தை தயாரிப்பதன் மூலம் பாலிவுட்டில் சூர்யா தயாரிப்பாளராக அடியெடுத்து வைக்கிறார். தற்போது சூர்யா வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் மற்றும் பாலா இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க - KGF 2 Collection: 900 கோடிக்கும் மேல் வசூலித்த யாஷின் கே.ஜி.எஃப் 2!

சூரரைப் போற்று இந்தி ரீமேக்கை தொடர்ந்து, கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பேனரில் ஒரு படத்தை இயக்க சுதா கொங்கரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். உண்மையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் தயாராகவுள்ளது. இதில் சூர்யா நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கும் படம் ஒன்றிலும் சூர்யா நடிக்கவுள்ளதால் சுதா படத்தின் ஹீரோ சூர்யாதானா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இவை ஒருபக்கம் இருந்தாலும் பாலிவுட் பட தயாரிப்பாளர் என அடுத்த லெவலுக்கு தற்போது பாய்ந்துள்ளார் சூர்யா.
Published by:Musthak
First published:

Tags: Actor Suriya

அடுத்த செய்தி