முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''ரொம்ப வலிக்குது, இதை எதிர்பார்க்கல...'' - விபத்து குறித்து சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கரா உருக்கம்

''ரொம்ப வலிக்குது, இதை எதிர்பார்க்கல...'' - விபத்து குறித்து சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கரா உருக்கம்

சுதா கொங்கரா

சுதா கொங்கரா

விபத்து ஒன்றில் தனக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக இயக்குநர் சுதா கொங்கரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என தமிழில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா, தற்போது ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் சூரரைப் போற்று படத்தை ரீமேக் செய்துவருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவும் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகிவருகின்றன. தற்போது சூர்யா நடித்துவரும் சூர்யா 42 படத்துக்கு பிறகு சூர்யா - சுதா கொங்கரா இணையும் படம் துவங்கும் என்று கூறப்படுகிறது. இதனால் இருவரது ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் இருந்துவருகிறார்கள்.

இந்த நிலையில் விபத்து ஒன்றில் தனக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக இயக்குநர் சுதா கொங்கரா தனது ட்விட்டர் பக்கத்தில் சில படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், ரொம்ப வலிக்கிறது. ஒரு மாத பிரேக். இந்த மாதிரி ஒரு பிரேக்கை நான் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ஜி.வி.பிரகாஷ் குமார், சாந்தனு உள்ளிட்ட பிரபலங்கள் விரைவில் நலம் பெற வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.

First published:

Tags: Actor Suriya, Soorarai Pottru