சூரரைப் போற்று படத்திற்கு 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை தனது அணியினருடன் படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
நடிகர் சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவான சூரரைப்போற்று (Soorarai Potru) திரைப்படம் கொரோனா சூழ்நிலை காரணமாக திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக OTT-யில் வெளியானது.
இதில் மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது.
இந்தப் படத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கிய சூர்யாவுக்கு தற்போது சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை சூர்யா தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பது, அவருக்குக் கிடைத்த சிறந்த பிறந்தநாள் பரிசு என இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.
Suriya: சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது - மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு!
சூர்யாவை தவிர்த்து, சிறந்த நடிகைக்கா அபர்ணா பாலமுரளிக்கும், சிறந்த திரைக்கதைக்காக இயக்குனர் சுதாகொங்கரா, சிறந்த பின்னணி இசைக்காக ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சிறந்த படம் என ஒட்டுமொத்தமாக 5 தேசிய விருதுகள் சூரரைப் போற்று படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
நாம ஜெயிச்சுட்டோம் மாறா!#SooraraiPottru @Suriya_offl @gvprakash @Aparnabala2 @rajsekarpandian @2D_ENTPVTLTD @nikethbommi @jacki_art @editorsuriya @PoornimaRamasw1 @deepakbhojraj @valentino_suren @gopiprasannaa pic.twitter.com/PxQe6chkoY
— Sudha Kongara (@Sudha_Kongara) July 22, 2022
இதனை இயக்குனர் சுதா கொங்கரா தனது அணியினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் சூர்யா கேரக்டரில் முன்னணி நடிகர் அக்சய் குமார் நடிக்கிறார். இந்தியிலும் சுதா கொங்கரா இந்த படத்தை இயக்குகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.