Home /News /entertainment /

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த சூரரைப்போற்று பிரபலம்!

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த சூரரைப்போற்று பிரபலம்!

நிகேத் பொம்மி - மெர்சி ஜான்

நிகேத் பொம்மி - மெர்சி ஜான்

சென்னையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைப்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சூரரைப்போற்று பட ஒளிப்பதிவாளர் நிக்கேத் பொம்மி நடிகை மெர்சி ஜானை மணந்துள்ளார்.

    2020-ல் வெளிவந்த சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் ரசிகர்களிடமும், பிரபலங்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு சூர்யாவுக்கு சிறந்த நடிகர், அபர்ணா பாலமுரளிக்கு சிறந்த நடிகை, இயக்குனர் சுதா கொங்கராவுக்கு சிறந்த திரைக்கதை, ஜி.வி.க்கு சிறந்த இசையமைப்பாளர் உட்பட ஐந்து தேசிய விருதுகளையும் பெற்று தந்தது.

    நிகேத் பொம்மி ரெட்டி 'சூரரைப் போற்று' படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அவரது பணி ரசிகர்களையும் விமர்சகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. தற்போது அவர் தனது நீண்ட நாள் காதலியான மெர்சி ஜானை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். சென்னையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைப்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சினிமா போலீஸ் என்றாலே அது விஜயகாந்த் தான்!

    பிரபல டப்பிங் கலைஞரும் நடிகையுமான மெர்சி ஜான் தற்போது அமேசான் பிரைம் ஒரிஜினலின் 'மாடர்ன் லவ்'-வில் நடித்து வருகிறார். நிகேத் பொம்மி சமீபத்தில் நானி மற்றும் நஸ்ரியா நடித்த 'அண்டே சுந்தராணிகி' என்ற தெலுங்கு படத்தில் பணிபுரிந்திருந்தார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி