பொம்மியை ஏற்றுக் கொண்டதற்கு மகிழ்ச்சி - சூரரைப்போற்று ஹீரோயின் நெகிழ்ச்சி

நடிகை அபர்ணா பாலமுரளி

சூர்யாவின் நடிப்புக்கு ரசிகர்களிடம் எவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்கிறதோ, அதற்கு சற்றும் குறையாமல் அபர்ணா பாலமுரளியையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

  • Share this:
சூரரைப்போற்று திரைப்படத்தையும் தன்னுடைய கதாபாத்திரத்தையும் ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு அந்தப் படத்தின் ஹீரோயின் அபர்ணா பாலமுரளி நன்றி தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நவம்பர் 12-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘சூரரைப்போற்று’. ஏர்டெக்கன் என்ற விமான நிறுவனத்தின் நிறுவனரான, கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் என்ற கேரக்டரிலும், அபர்ணா பாலமுரளி பொம்மி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

ஒருபக்கம் தனது திறமையான நடிப்பால் சூர்யா ராஜாங்கம் நடத்திக் கொண்டிருக்க, அவருக்கு ஜோடியாகவும், தமிழ் சினிமாவின் வழக்கமான லூசுப் பெண் கதாபாத்திரம் போன்று இல்லாமலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார் பொம்மியாக அபர்ணா பாலமுரளி. படத்தின் இயக்குநர் அபர்ணா பாலமுரளி என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக ஆணாதிக்க சமூகம் பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதை தனது நடிப்பால் சாத்தியப்படுத்தி, சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கையும் அளித்துள்ளார்.சூர்யாவின் நடிப்புக்கு ரசிகர்களிடம் எவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்கிறதோ, அதற்கு சற்றும் குறையாமல் அபர்ணா பாலமுரளியையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சிலர் ஒருபடி மேலேபோய் இப்படி ஒரு பெண் தன் வாழ்க்கையில் வர வேண்டும் என்று நினைப்பதை சமூகவலைதள பதிவுகளின் மூலம் நம்மால் அறிய முடிகிறது.இந்நிலையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகை அபர்ணா பாலமுரளி, “சூரரைப்போற்று படத்தை ஏற்றுக் கொண்டதற்கும், பொம்மியை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் நன்றி. இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

பார்க்க: சூரரைப் போற்று நாயகி அபர்ணா பாலமுரளி லேட்டஸ்ட் போட்டோஸ்

அபர்ணா பாலமுரளியின் நடிப்பைப் பார்த்த விஜய் தேவரகொண்ட உள்ளிட்ட தெலுங்கு திரைபிரபலங்களும் பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published: