Home /News /entertainment /

சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் நடிக்கும் மெகா ஸ்டார்... மீண்டும் ஒரு சூப்பர் ஹிட்டுக்கு தயாராகும் சூர்யா

சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் நடிக்கும் மெகா ஸ்டார்... மீண்டும் ஒரு சூப்பர் ஹிட்டுக்கு தயாராகும் சூர்யா

சூர்யா

சூர்யா

கொரோனா பாதிப்பு சற்று அடங்கியபோது சூரரைப் போற்று படத்தை திரையரங்குகளில் வெளியிட முயற்சிகள் நடந்தன. இருப்பினும், அந்த நேரத்தில் ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக வெளியீடு நடக்கவில்லை.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி, ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில், வெளிவந்த சூரரைப் போற்று, பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது. இந்த படம் குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்கும் முயற்சியை இந்தியாவில் முன்னெடுத்த ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை தழுவி உருவாக்கப்பட்டிருந்தது.

    கோபிநாத் எழுதிய அவரது சுயசரிதையான சிம்பிளி ப்ளை(simply fly) என்ற புத்தகத்தை ஆதாரமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விமான ஓட்டியாகவே வாழ்ந்திருப்பார். இதற்காக சூர்யா எடுத்துக் கொண்ட மெனக்கெடல்கள், அவரை சிறந்த நடிகர்களுக்கான பட்டியலில் மீண்டும் ஒருமுறை முன்னணியில் நிறுத்தியது.

    இதையும் படிங்க : காலத்தால் அழியாத பாடல்கள்... தென்னிந்திய சினிமாவின் இசையரசி பி.சுசிலாவின் திரைப் பயணம்

    சூரரைப் போற்று வெற்றி இந்தியா முழுவதும் எதிரொலித்ததால் இந்தப் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தியேட்டர் மெட்டீரியலான சூரரைப் போற்று படத்தில் பிரமாண்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் ஓடிடியில் வெளியாகியே அதிக வரவேற்பை சூரரைப் போற்று பெற்றிருந்தது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் இன்னும் மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்திருக்கும்.

    கொரோனா பாதிப்பு சற்று அடங்கியபோது சூரரைப் போற்று படத்தை திரையரங்குகளில் வெளியிட முயற்சிகள் நடந்தன. இருப்பினும், அந்த நேரத்தில் ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக வெளியீடு நடக்கவில்லை.

    இதையும் படிங்க : தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்ற ரேக்ளா ரேஸ்... ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்ட பந்தயம்

    இந்நிலையில், இந்தியில் சூரரைப் போற்று படத்தில் முன்னணி நடிகர் அக்சய் குமார் நடிப்பார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இவர் தமிழில் ரஜினி நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்திருப்பார். தமிழில் இயக்கிய சுதா கொங்கராதான் இந்தியிலும் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். இந்தியிலும் சூரரைப் போற்று படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளதால், மீண்டும் ஒரு சூப்பர் ஹிட்டுக்கு சூர்யா தயாராகி விட்டார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Suriya

    அடுத்த செய்தி