சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் சூர்யா இடம் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் மெகா ஹிட்டான சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை, பிரபல தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ராவுடன் இணைந்து சூர்யாவின்2டி நிறுவனம் தயாரிக்கிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தில் அக்சய் குமார், நடிகை ராதிகா மதன் ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடிக்கின்றனர். 2020-ல் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் மெகா ஹிட்டானது.
தியேட்டர் எக்ஸ்பீரின்ஸ் படமான சூரரைப் போற்று, கொரோனா பரவலால் துரதிருஷ்டவசமாக அமேசான் ஓடிடியில் வெளியானது. இருப்பினும் ரசிகர்கள் இந்த படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பை அளித்தனர்.
லாரன்ஸ், வடிவேலு நடிப்பில் சந்திரமுகி – 2… அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா சிறப்பாக உருவாக்கியிருப்பார். இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனான படங்களில் ஒன்றாக கருதப்படும் சூரரைப் போற்று, தற்போது இந்தியில் உருவாகி வருகிறது.
இந்நிலையில் சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்று சூர்யாவே அறிவித்துள்ளார். ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைசாக கமல் நடித்த விக்ரம் படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றார்.
ரோலக்ஸ் என்ற கேரக்டரில் அவர் நடித்த காட்சி பெரும் வரவேற்பை பெற்றது.
‘நானே ஒரு இயக்குனர்; எனக்கே கதை எழுதப் பார்க்கிறார்கள்’ – வதந்திகள் குறித்து டி.ஆர். வேதனை
இந்தியில் சூரரைப் போற்று படத்தை தயாரிப்பதன் மூலம் பாலிவுட்டில் சூர்யா தயாரிப்பாளராக அடியெடுத்து வைக்கிறார். தற்போது சூர்யா வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் மற்றும் பாலா இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து சர்வதேச தரத்திலான லோகேஷ் கனகராஜின் இரும்புக் கை மாயாவி மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் ஒருபடம் என 2 படங்களில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.