3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... ரியல் ஹீரோ சோனு சூட் அறிவிப்பு

கொரோனா வைரஸால் வேலையிழந்த 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தர உள்ளதாக நடிகர் சோனு சூட் அறிவித்துள்ளார்.

3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... ரியல் ஹீரோ சோனு சூட் அறிவிப்பு
நடிகர் சோனு சூட்
  • Share this:
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆதரவற்ற பலருக்கு உதவிக்கரம் நீட்டி தொடர் சேவையாற்றி வரும் சோனு சூட் மக்களிடையே ரியல் ஹீரோவாக மாறிவருகிறார்.

ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் வசதி உள்ளிட்ட பல உதவிகளை செய்து வந்தார். அண்மையில் தன் மகள்களை ஏரில் பூட்டில் உழுத ஆந்திர மாநில விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

வாழ்வதாரத்திற்காக ரோட்டில் சிலம்பம் சுற்றி பிழைத்து வந்த மூதாட்டியை தற்காப்பு கலை பயிற்சியாளராக மாற்றினார். இதுப்போன்ற சேவைகளால் சோனு சூட் மக்களிடையே பிரபலமாகி வருகிறார்.


இதனிடையே சோனு சூட் பிறந்த நாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் பிறந்தநாள் பரிசாக கொரோனாவால் வேலை இழந்த 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வாங்கி தர உள்ளதாக சோனு சூட் அறிவித்துள்ளார்.

இதற்காக தன்னர்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த பணியை மேற்கொள்ள சோனு சூட் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கென்று தனி பிரத்யேக வலைதள பக்கத்தை அவர் தொடங்கி உள்ளார்.
First published: August 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading