பார்ட் 2 வரிசையில் உருவாகும் சூதுகவ்வும் 2!

கடந்த ஆண்டில் விஸ்வரூபம் 2, மாரி 2, சண்டக் கோழி 2, சாமி 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

news18
Updated: July 6, 2019, 5:28 PM IST
பார்ட் 2 வரிசையில் உருவாகும் சூதுகவ்வும் 2!
நடிகர் விஜய் சேதுபதி
news18
Updated: July 6, 2019, 5:28 PM IST
சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபகாலமாகவே வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டில் விஸ்வரூபம் 2, மாரி 2, சண்டக் கோழி 2, சாமி 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இவற்றில் சில படங்கள் தோல்வியைத் தழுவின.

இருப்பினும் முதல் பாகத்தின் வெற்றியை கருத்தில் கொண்டே இரண்டாவது பாகங்கள் உருவாகி வருகின்றன. தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்தியா சினிமாவிலேயே வெற்றி பெற்ற படங்களின் இரண்டாவது பாகங்களை உருவாக்குவது ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் சூதுகவ்வும் படத்தைத் தயாரித்த சி.வி.குமார் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் அட்டகத்தி, சூது கவ்வும், இறுதி சுற்று, முண்டாசுபட்டி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்து முக்கியமான இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் சி.வி.குமார். இவர் சமீபத்தில் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் படத்தில் மீண்டும் விஷ்ணு விஷால், கருணாகரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

வீடியோ பார்க்க: கடந்த சீசனில் தாடி பாலாஜி... இம்முறை வனிதா மற்றும் மீரா மிதுன்... சொந்த பிரச்னைகளால் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பிக்பாஸ்

First published: July 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...