• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விக்ரம் படத்தின் இசை உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்...!

விக்ரம் படத்தின் இசை உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்...!

விக்ரம் படம்

விக்ரம் படம்

விக்ரம் படத்தின் இசை உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. எனினும் ரிசல்ட் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கமல் நடித்துவரும் விக்ரம் படத்தின் இசை உரிமையை பிரபல நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது. 

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் படத்தை எடுத்து வருகிறார். பகத் பாசில், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களும் இதில் இடம்பெற்றுள்ளதால் விக்ரம் படத்துக்கு அறிவிப்பு முதல் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அனிருத் விக்ரமுக்கு இசையமைக்கிறார்.

கமல் படம் ஒன்றுக்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதல்முறை. இசையமைப்பாளர் இயக்குனரின் தேர்வு என்றும் முழுமையாக சொல்ல முடியாது. கமலின் படத்தில் யார் நடிக்க வேண்டும், யார் கேமராவை இயக்க வேண்டும், யார் இசைக்க வேண்டும் என தீர்மானிப்பவர் அவரே. விக்ரம் படத்தில் நடிப்பதுடன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் படத்தை கமல் தயாரிக்கவும் செய்கிறார்



ரஹ்மான், ஹாரி ஜெயராஜ், யுவனுக்குப் பிறகு அனிருத்துக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. என்னதான் விமர்சித்தாலும் ஒரு படத்தில் இரண்டு பாடல்களையாவது ஹிட் செய்துவிடும் திறமை அவரிடம் உண்டு. போட்ட டியூனாக இருந்தால் ரசிகர்கள் கேட்க மாட்டேன் என்றா சொல்லப் போகிறார்கள்? ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்துக்கும் அனிருத்தான் இசை. அவருக்கு நல்ல சந்தை மதிப்பு உள்ளது.

Also read... புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சூர்யா...!

விக்ரம் படத்தின் இசை உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. எனினும் ரிசல்ட் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். சோனி மியூஸிக் பெரும் தொகைக்கு விக்ரம் படத்தின் இசை உரிமையை வாங்கியிருக்கிறது. அதனால், படத்தில் பாடல்கள் மூன்று நான்கேனும் கண்டிப்பாக இருக்கும்விக்ரம் 2022 கோடையில் திரைக்கு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: