ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெற்றி மாறனின் ‘விடுதலை’ ஆடியோ உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

வெற்றி மாறனின் ‘விடுதலை’ ஆடியோ உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

விடுதலை ஃபர்ஸ்ட் லுக்

விடுதலை ஃபர்ஸ்ட் லுக்

படத்தின் பர்ஸ்ட் லுக்கில் சூரி போலீசாகவும், விஜய் சேதுபதி கைதியாகவும் காட்டப்பட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  வெற்றிமாறனின் விடுதலை படத்தின் வியாபாரம் தொடங்கியுள்ளது. படத்தின் இசை உரிமையை சோனி மியூஸிக் வாங்கியுள்ளது.

  ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் படங்கள் வெற்றிமாறனை இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மாற்றியுள்ளது. இந்திய அளவில் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். பிறமொழி திரைக்கலைஞர்கள் அவரது படங்களை உற்று கவனிக்கின்றனர். தேசிய விருது பெற்ற அசுரன் திரைப்படம் இந்திய அளவில் கவனம் பெற்றதுடன், ஆனந்த் எல்.ராய் போன்ற இயக்குனர்கள் படத்தை மனமுவந்து பாராட்டினர்.

  வெற்றிமாறன் தற்போது இரு படங்களை இயக்கி வருகிறார். ஒன்று சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலைத் தழுவி அதே பெயரில் எடுக்கப்படும் படம். ஜல்லிக்கட்டில் மாடுகளைப் பிடிப்பதை பின்னணியாகக் கொண்ட கதை இது. வழக்கம் போல் நாவலுடன் தனது புனைவையும் சேர்த்து வாடிவாசலை வெற்றிமாறன் இயக்குகிறார், சூர்யா நாயகன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அத்துடன், ஜெயமோகன் எழுதி வார இதுழில் வெளிவந்த சிறுகதையை மையமாக வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இதில் முதலில் விடுதலையே வெளியே வரவிருக்கிறது. இந்தப் படத்தில் சூரி போலீஸாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் தான் கதையின் நாயகன். முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக்கில் சூரி போலீசாகவும், விஜய் சேதுபதி கைதியாகவும் காட்டப்பட்டுள்ளனர். இசைஞானி இளையராஜா படத்துக்கு இசையமைக்கிறார்.

  ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் எல்ரெட் குமார் படத்தை தயாரிக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விடுதலையின் இசை உரிமையை சோனி மியூஸிக் வாங்கியுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Director vetrimaran