Home /News /entertainment /

மாநாடு படத்துக்கு சோனிலிவ் போட்ட முக்கிய கண்டிஷன்!

மாநாடு படத்துக்கு சோனிலிவ் போட்ட முக்கிய கண்டிஷன்!

சிம்பு

சிம்பு

மாநாடு வெளியாகி நான்கு வாரங்கள் கழித்து ஓடிடியில் படத்தை வெளியிடுவதென்று ஒப்பந்தம் போட்டிருப்பதாக கூறுகிறார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
மாநாடு படத்தின் சேட்டிலைட் உரிமையை எட்டு கோடிகளுக்கு கலைஞர் தொலைக்காட்சி வாங்கியது என்ற செய்தி வெளியான நிலையில், படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது. இதன் பின்னணியில் நடந்தது என்ன?

மாநாடு கடைசிக்கட்டத்தில் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கியது. அதன் சேட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்க முன் வந்தது உண்மை. எட்டு கோடி ரூபாய் சேட்டிலைட் உரிமைக்காக பேசப்பட்டிருக்கிறது. படத்தை 2022 பொங்கலுக்கு வெளியிடலாம் என்ற எண்ணத்தில் இந்த ஆஃபரை முன் வைத்திருக்கிறார்கள்.

ஆனால், படத்தின் ஓடிடி உரிமையை 11 கோடிகளுக்கு வாங்கிய சோனிலிவ் நிறுவனம், ஓடிடியில் மாநாடு வெளியாகி 75 தினங்கள் கழித்தே படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என கண்டிஷன் போட்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே கலைஞர் தொலைக்காட்சி சேட்டிலைட் உரிமையை வாங்குவதில் இருந்து பின்வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

தற்போது மாநாடு படத்தின் சேட்டிலைட் உரிமை விஜய் தொலைக்காட்சி வசம் உள்ளது. ஓடிடி உரிமையை சோனிலிவ் வாங்கியுள்ளது. மாநாடு வெளியாகி நான்கு வாரங்கள் கழித்து ஓடிடியில் படத்தை வெளியிடுவதென்று ஒப்பந்தம் போட்டிருப்பதாக கூறுகிறார்கள். அதன்படி இந்த மாதம் கடைசியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் மாநாடு ஓடிடியில் வெளியாகலாம்.

திரையரங்கை பொறுத்தவரை நான்கு தினங்களில் படத்தை வாங்கிய அனைவரும் போட்ட பணத்தை எடுத்ததுடன் லாபம் சம்பாதிக்க ஆரம்பித்திருப்பதாக படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார். ஓடிடியில் வெளிவந்தால் பிற மொழி ரசிகர்களையும் மாநாடு ஆச்சரியப்படுத்தும்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Simbu

அடுத்த செய்தி