Sony LIV: தேன் திரைப்படத்துடன் ஆட்டத்தை தொடங்கிய சோனி லிவ்!

தேன் திரைப்படம்

தமிழைத் தவிர மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகிறது.

 • Share this:
  சோனி லிவ் ஓடிடி தளத்தில் இன்று தேன் திரைப்படத்தை வெளியிட்டுள்ளது. அவர்கள் தமிழில் வெளியிடும் முதல் திரைப்படம் இது. தொடர்ந்து அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி நடித்தப் படங்களை வெளியிட இருக்கிறார்கள்.

  ஓடிடி தளங்கள் புற்றீசலாக கிளம்பியுள்ளன. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட் ஸ்டார் போன்ற மெகா தளங்களுடன் சின்னச்சின்ன ஓடிடி தளங்களும் களத்தில் உள்ளன. இதில் கூடுதலாக சோனி லிவ் ஓடிடி தளம் இன்றுமுதல் தனது தமிழ் வெளியீட்டை தொடங்கியுள்ளது.

  இந்திய கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் தொடர்புடைய கதைகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பது தான் எங்களின் தலையாய முயற்சி என்று சொல்லும் சோனி லவ், அதனை மெய்ப்பிப்பது போல் தேன் படத்தை இன்று தனது முதல் தமிழ்த் திரைப்படமாக வெளியிட்டுள்ளது.

  கிராமத்தில் தேனி வளர்க்கும் வேலு (தருண் குமார்) மற்றும் பூங்கோடி (அபர்நதி) ஆகியோரின் வாழ்க்கையை சுற்றி அமைந்தது தான் தேன் படத்தின் மைய கதை. துரதிர்ஷ்டவசமாக பூங்கோடி நோய்வாய்ப்பட்டு உயிருக்கு போராடுகிறார். குடியுரிமையை நிரூபிப்பதற்கான சரியான ஆவணங்கள் இல்லாததால் பூங்கோடிக்கு மருத்துவ உதவியைப் பெற வேலு போராடுகிறார்.

  அதிகாரத்துவ சிக்கல்கள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு இல்லாமை ஆகியவை, சமூகத்தின் யதார்த்தத்தை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  கணேஷ் விநாயகன் இந்த படத்தை இயக்கி உள்ளார். பல்வேறு திரைப்பட விழாக்களில் ’தேன்’ திரையிடப்பட்டு 40-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்தியன் பனோரமா 2020-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு தமிழ் படங்களில் இதுவும் ஒன்றாகும். 11-வது தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழா, டெல்லி என்.சி.ஆர், இந்தியா, கல்ட் கிரிட்டிக் திரைப்பட விருதுகள் 2020, புது தில்லி திரைப்பட விழா, அயோத்தி திரைப்பட விழா, அயோத்தி 2020 போன்ற பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. தமிழைத் தவிர மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகிறது.

  படம் குறித்துப் பேசிய இயக்குனர் கணேஷ் விநாயகன், "படிக்காத ஒரு மனிதன், அவனுடைய உரிமைகளுக்காகப் போராடுகிறான். இதுதான் இன்று பலரின் யதார்த்தம். இந்தப் போராட்ட கதையை தான் 'தேன்' முன்னிலைப்படுத்துகிறது. இந்த படம் உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. இன்றைய காலத்திற்கு இது பொருத்தமானது. இந்த திரைப்படம் பலரின் இதயங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

  படத்தின் நாயகன் தருண் குமார் பேசுகையில், "ஒரு அற்புதமான கருத்தை சொல்லும் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இது அனைவரிடமும் சரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தின் குழுவுடன் இணைந்து பணியாற்றியது மிக மகிழ்ச்சியாக இருந்தது. சோனி லிவ் ஓடிடி தளத்தின் மூலம் வெளியாவதால் இந்தப் படம் எல்லைகளைத் தாண்டி பல லட்சக்கணக்கான மக்களைச் சென்றடையும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

  இந்தப் படத்தைத் தொடர்ந்து சோனி லிப் அரவிந்த்சாமி நடித்த நரகாசூரன், விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கியுள்ள கடைசி விவசாயி ஆகிய படங்களை வெளியிட உள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: