• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கொரோனா : தனது 6 மாடி ஹோட்டலை மருத்துவர்கள் ஓய்வெடுக்க வழங்கிய நடிகர்

கொரோனா : தனது 6 மாடி ஹோட்டலை மருத்துவர்கள் ஓய்வெடுக்க வழங்கிய நடிகர்

நடிகர் சோனு சூட்

நடிகர் சோனு சூட்

நடிகர் ஷாரூக்கானும் மும்பையில் உள்ள தனது 4 மாடி அலுவலகத்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  • Share this:
    தன்னுடைய ஹோட்டலை மருத்துவர்கள் ஓய்வுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நடிகர் சோனு சூட் அறிவித்துள்ளார்.

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக தொற்று பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மும்முரமாக பணி செய்து வரும் நிலையில், தனது 6 மாடி ஹோட்டலை மருத்துவர்கள் தங்கி ஓய்வெடுக்க பயன்படுத்திக் கொள்ள நடிகர் சோனு சூட் வழங்கியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் முன்னணி வில்லன் நடிகராக வலம் வருபவர்.

    இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் சோனு சூட், "மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரவும் பகலும் உழைத்து வரும் மருத்துவ ஊழியர்களுக்காக என்னால் முடிந்த உதவியை செய்வதில் நான் பெருமை அடைகிறேன். மும்பையின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் அவர்களுக்கு ஓய்வு தேவை.

    அதற்காக மும்பையில் உள்ள எனது 6 மாடி ஹோட்டலை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தங்க இலவசமாக வழங்குகிறேன். இந்த முன்னெடுப்பு குறித்து மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டது" என்று கூறியுள்ளார்.

    இவரைப் போல் நடிகர் ஷாரூக்கானும் மும்பையில் உள்ள தனது 4 மாடி அலுவலகத்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.



    மேலும் படிக்க: தூய்மைப் பணியாளர்கள் காலில் விழுந்து வணங்கி உதவிய விஜய் ரசிகர்கள்!



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: