குவிந்த பாராட்டுகள்... நிகழ்ச்சி மேடையிலேயே கண்கலங்கிய நடிகர் சோனு சூட் - உருக்கமான வீடியோ

கபில் சர்மா நிகழ்ச்சியில் சோனு சூட்

கபில் சர்மா தொகுத்து வழங்கும் பாலிவுட் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சோனு சூட் மேடையிலேயே கண்கலங்கிய வீடியோ வெளியாகி உள்ளது.

 • Share this:
  கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆதரவற்ற பலருக்கு உதவிக்கரம் நீட்டி தொடர் சேவையாற்றி வரும் சோனு சூட் மக்களிடையே ரியல் ஹீரோவாக மாறிவருகிறார்.

  ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் வசதி உள்ளிட்ட பல உதவிகளை செய்து வந்தார். அண்மையில் தன் மகள்களை ஏரில் பூட்டில் உழுத ஆந்திர மாநில விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

  வாழ்வதாரத்திற்காக ரோட்டில் சிலம்பம் சுற்றி பிழைத்து வந்த மூதாட்டியை தற்காப்பு கலை பயிற்சியாளராக மாற்றினார். இதற்கெல்லாம் மேலாக தனது பிறந்தநாள் பரிசாக கொரோனாவால் வேலையிழந்த 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தர உள்ளதாக அதிரடியாக அறிவித்தார்.

  நடிகர் சோனு சூட் அடுத்தடுத்த சேவைகளால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். இவர் தற்போது கபில் சர்மா தொகுத்து வழங்கும் பிரபல பாலிவுட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். சோனி டிவி அந்த நிகழ்ச்சியின் சில நிமிட வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
  அந்த வீடியோவில் சோனு சூட் மூலம் உதவி பெற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவருக்கு உருக்கமாக நன்றி தெரிவித்தனர். இந்த வீடியோவை பார்த்த சோனு சூட், நிகழ்ச்சி மேடையிலேயே கண்கலங்கினார்.

  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சோனு சூட்டை பாராட்டி பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

   
  Published by:Vijay R
  First published: