செல்வராகவன், தனுஷூக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்

காதல் கொண்டேன் திரைப்படம் வெளியாகி 17 வருடங்களாகியிருக்கும் நிலையில் அப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு சோனியா அகர்வால் நன்றி தெரிவித்துள்ளார்.

செல்வராகவன், தனுஷூக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்
நடிகை சோனியா அகர்வால்
  • Share this:
கஸ்தூரிராஜா தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான படம் காதல் கொண்டேன். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் வெளியாகி 17 ஆண்டுகளாகிறது.

இதையடுத்து நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் காதல் கொண்டேன் படம் பற்றிய நினைவுகளை பதிவிட்டு மகிழ்ந்தனர்.  இந்நிலையில் நடிகை சோனியா அகர்வால், “கடவுள், வசீகரிக்கும் தமிழ்நாடு, செல்வராகவன், கஸ்தூரி ராஜா அனைவருக்கும் நன்றி.. அழகான பார்வையாளர்களுக்கு என்னை அறிமுகம் செய்து 17 வருடங்கள் ஆகின்றன. நன்றி தனுஷ்.. எல்லா தொழில்நுடப் கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் நன்றி... நான் பார்த்த தமிழ் சினிமாக்களில் ஒப்பிட முடியாத ஒரு படம் காதல் கொண்டேன்” என்று கூறி காதல் கொண்டேன் பட போஸ்டர் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்த நிலையில், செல்வராகவன், தனுஷ் உள்ளிட்டோர் சோனியா அகர்வாலின் ட்வீட்டை லைக் செய்யவில்லை. காதல் கொண்டேன் படத்தில் சோனியா அகர்வாலை ஹீரோயினாக அறிமுகப்படுத்திய செல்வராகவன் 2006-ம் ஆண்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார் சோனியா அகர்வால். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2010-ம் ஆண்டு விவாகரத்து பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading