• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Tamil Cinema: தமிழர்களின் சென்டிமெண்டை உரசிப்பார்த்த திரைப்படங்கள் ஒரு பார்வை!

Tamil Cinema: தமிழர்களின் சென்டிமெண்டை உரசிப்பார்த்த திரைப்படங்கள் ஒரு பார்வை!

டெரரிஸ்ட் - இனம்

டெரரிஸ்ட் - இனம்

ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனாக வரும் சுரேஷ் கோபி தனது நாய்க்கு பிரபாகரன் என பெயர் வைத்திருப்பார். சுரேஷ் கோபி நாயை பிரபாகரா என்று அழைக்கும் போதெல்லாம் மலையாளிகள் முகத்தில் புன்னகை அரும்பும்.

  • Share this:
சென்டிமெண்ட் விஷயத்தில் மிகவும் சென்ஸிடிவ்வானவர்கள் தமிழர்கள். நடைமுறை வாழ்க்கையில் எப்படியிருந்தாலும் திரையில் ஒழுக்கமும், நேர்மையும், கலாசார விழுமியங்களும் எதிர்பார்க்கும் இருநிலை கொள்கையுடையவர்கள். தமிழர்களின் சென்டிமெண்டை உரசி சிக்கலுக்குள்ளான படங்கள் பல.

1. மல்லி

1998-ல் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த மல்லி திரைப்படம், அப்போது கடும் விமர்சனத்தை சந்தித்தது. ராஜீவ்காந்தி கொலையை நினைவுப்படுத்தும் வகையில் இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் இயக்கியிருந்தார். மனித வெடிண்டு தாக்குதலில் அரசியல் தலைவர் ஒருவரை கொலை செய்ய 19 வயது மல்லி என்ற இளம்போராளியை தேர்வு செய்கிறார்கள். மனிதவெடிகுண்டு தாக்குதலுக்கு மல்லியும் மகிழ்ச்சியோடு தயாராகிறாள். தாக்குதலுக்கான நாள் நெருங்குகையில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிகிறாள். தனக்குள் ஓர் உயிர் இருப்பது அவளது பார்வையை மாற்றுகிறது. உயிரின் மதிப்பை அவள் அறிந்து கொள்வதாக இந்த 95 நிமிட படம் போதித்தது. பாதிக்கப்பட்டவர்களின் பின்னணியிலிருந்து பிரச்சனையை அணுகாமல், போரையோ, கொலையையோ அனுபப்படாத இடத்திலிருந்து நியாயங்களை பேசிய படம் மல்லி. தமிழில்தான் இந்தப் படத்தின் பெயர் மல்லி. சர்வதேச பெயர் டெரரிஸ்ட். விடுதலைப் போராட்டத்தை தீவிரவாதமாகவும், போராளிகளை தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கும் போக்கை மல்லி தொடங்கி வைத்தது.

2. டேம் 999

1975-ல் சீனாவின் பேன்கியோ அணை பெரும் சூறாவளியில் உடைந்தது. அதனுடன் 61 அணைகள் சேதமாயின. இந்த விபத்தில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். இந்த விபத்து அணைகளை ஆபத்து மிகுந்த ஆயுதமாக பார்க்கும் நிலையை உருவாக்கியது. பல்வேறு ஆவணப்படங்கள் இதையொட்டி எடுக்கப்பட்டன. 2011-ல் சோஹன் ராய் இதுபற்றி ஒரு ஆவணப்படத்தை இயக்கினார். பிறகு அதையே டேம் 999 என்ற திரைப்படமாக எடுத்தார். இந்தப் படம் திரைக்கு வந்த போது எதிர்க்கட்சியான திமுகவும், ஆளும்கட்சியான அதிமுகவும் ஒருசேர எதிர்த்தன. அதிமுக அரசு படத்துக்கு தடை விதித்தது. ஒரே காரணம், டேம் 999 கதையை கேரளாவில் நடப்பதாக சோஹன் அலி எழுதியிருந்தார். முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என கேரளாவும், உயர்த்த வேண்டும் என தமிழகமும் போராடி வந்த காலம். முல்லைப் பெரியாறு அணை சேதமடைந்துள்ளது, அது உடைந்தால் கேரளாவின் பெரும்பகுதி அழிந்துவிடும் என அங்குள்ள அரசியல்வாதிகள் மக்களை பயமுறுத்தி வந்த நிலையில் டேம் 999 படம் அதற்கு வலுசேர்ப்பது போல் அமைந்தது. அணை உடைவதுதான் படத்தின் கிளைமாக்ஸே. எப்படி தமிழகத்தில் படத்தை அனுமதிப்பார்கள்? தடை விதித்தார்கள். இயக்குனர் நீதிமன்றம் போன பிறகும் படத்தை தமிழகத்தில் வெளியிட முடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

3. இனம்

இலங்கை இனப்படுகொலை பற்றிய சந்தோஷ்சிவனின் படம். மல்லி, டெரரிஸ்ட் என இரு தலைப்புகள் கொடுத்தது போல் இதற்கும் தமிழில் இனம் என்று பெயர் வைத்து சர்வதேச தலைப்பு என சிலோன் என பெயரிட்டார். மல்லியில் ஏற்கனவே அனுபவப்பட்டிருந்ததால் இனம் 2014-ல் வெளியானதும் எதிர்ப்பை சந்தித்தது. ஒரே வாரத்தில் படம் திரையரங்கிலிருந்து தூக்கப்பட்டது. இந்தப் படம் விரைவில் ஓடிடியில் வெளியாகயிருப்பதாக சந்தோஷ்சிவன் கூறியுள்ளார்.

4. வரனே ஆவ்ஷ்யமுண்டு

தமிழில், மணமகன் தேவைப்படுகிறார் என்று இதனை மொழிபெயர்க்கலாம். துல்கர் சல்மான் தயாரித்து நடித்த மலையாளப்படம். இதில் ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனாக வரும் சுரேஷ் கோபி தனது நாய்க்கு பிரபாகரன் என பெயர் வைத்திருப்பார். சுரேஷ் கோபி நாயை பிரபாகரா என்று அழைக்கும் போதெல்லாம் மலையாளிகள் முகத்தில் புன்னகை அரும்பும். 1988-ல் சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால், சீனிவாசன், திலகன், கரமனா ஜனார்த்தனன் நடித்த பட்டண பிரவேசம் படத்தில் ஜனார்த்தனனின் பெயர் பிரபாகரன் தம்பி. தொழில் கடத்தல், அவரது தொழில் கூட்டாளி திலகன். சிஐடிக்கு பயந்து தலைமறைவாக பிரபாகரனை தேடி வருவார். ஒருகட்டத்தில் அவரும் திலகனை கைவிட, அதிர்ச்சியில் பிரபாகரா என்பார். திலகனின் டோனில் பிரபாகரா என்றால் மலையாளிகளுக்கு பட்டண பிரவேசம் படம் நினைவுவரும். இப்படி ஒரு வரி வசனத்தில் நினைவுக்குவரும் எத்தனையே படங்கள் அங்குண்டு. அதனடிப்படையில் வைத்தது பிரபாகரா என்ற பெயர். நமக்கு பிரபாகரன் என்ற பெயரில் தெரிந்த ஒரே நபர் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் என்பதால், நாய்க்கு எப்படி தலைவர் பெயர் வைக்கலாம் என்று சண்டைக்கு கிளம்பினர். துல்கர் சல்மான் வருத்தம் தெரிவித்தார்.

5. தி பேமிலி மேன் 2

இதுபற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அனைவருக்கும் தெரியும். தமிழர்களுக்கு ஈழ சென்டிமெண்ட் அதிகம். இறுதிப்போருக்கு பின் ஈழத்தை மட்டுமே கொள்கை பின்புலமாகக் கொண்டு இங்கே பல அமைப்புகளும், கட்சிகளும் உருவாகின. அவர்களின் அரசியல் கொள்கையே ஈழம் என்பதால் அது குறித்து எது வந்தாலும் தேவைக்கு அதிகமாகவே விமர்சிக்கும் போக்கு தமிழகத்தில் ஏற்பட்டுவிட்டது. அதிகபடியான உணர்ச்சி, அறிவுப்பூர்வமான அணுகுமுறைக்கு எதிரானது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: