ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் இருக்கிறேன்…’ – நடிகர் கஞ்சா கருப்பு வேதனை

‘சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் இருக்கிறேன்…’ – நடிகர் கஞ்சா கருப்பு வேதனை

நடிகர் கஞ்சா கருப்பு

நடிகர் கஞ்சா கருப்பு

கஞ்சா கருப்புக்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு என்று நான் தயாரித்த படத்தின் இயக்குனர் மற்றவர்களிடம் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

படம் தயாரித்து இழப்பு ஏற்பட்டதால் சொந்த வீட்டை விற்று விட்டு வாடகை வீட்டில் இருப்பதாக நடிகர் கஞ்சா கருப்பு வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத் தகுந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கஞ்சா கருப்பு. இவர் 2003-ல் வெளிவந்த பிதாமகன் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இயக்குனர் பாலா இவரை திரையில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த படத்தில் கஞ்சா விரும்பியாக இவர் நடித்திருப்பார்.

இதன் அடிப்படையில் கருப்பு என்ற தனது பெயரை கஞ்சா கருப்பு என்று மாற்றிக்கொண்டார். அந்தப் பெயரை அவருக்கு நிலையாக மாறிவிட்டது.

அதே ஆண்டில் அமீர் இயக்கத்தில் வெளிவந்த ராம் திரைப்படத்தில் வாழவந்தான் என்ற கேரக்டரில் கஞ்சா கருப்பு நடித்து வரவேற்பை பெற்றார். இதன்பின்னர் விஜய்யுடன் சிவகாசி,விஷாலுடன் சண்டக்கோழி, அஜித்துடன் திருப்பதி என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தார்.

கிறிஸ்துமஸ் வெளியீட்டை தவிர்த்தது ஜெயம் ரவியின் அகிலன்… புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிப்பு

நடிப்புக்கு வந்ததில் இருந்து 100க்கும் அதிகமான படங்களில் இவர் நடித்திருக்கிறார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு சரியான படங்கள் அமையவில்லை. இதற்கிடைய 2010 இல் பிஸியோதெரபிஸ்ட் டாக்டர் சங்கீதா என்பவரை கஞ்சா கருப்பு திருமணம் முடித்தார்.

பின்னர், 2014-ல் வேல் முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் இழப்பு ஏற்பட்டு சொந்த வீட்டை விற்று விட்டு வாடகை வீட்டிற்கு மாறியிருப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

க்ரைம் த்ரில்லர்.. அமேசான் ஓடிடி வெளியீடு.. 'வதந்தி' வெப் சீரிஸ் எப்படி இருக்கு? ரிவ்யூ!

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அவர் பேசுகையில், ‘படம் தயாரித்து மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று எனக்கு சில ஆலோசனை சொன்னார்கள். நான் அதை கேட்கவில்லை. படம் பாதி முடிந்தபோதுதான் எனக்கு தெரிந்தது. தயாரிப்பாளர் கஞ்சா கருப்புக்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு என்று நான் தயாரித்த படத்தின் இயக்குனர் மற்றவர்களிடம் கூறியுள்ளார். கடைசியில் நான் உழைத்து வாங்கிய காசில் வைத்திருந்த பாலா – அமீர் இல்லம் என்ற எனது சொந்த வீட்டை விற்று விட்டு, இப்போது 20 ஆயிரம் ரூபாய்க்கு வாடகை வீட்டில் இருக்கிறேன். அதைப் பற்றி கவலைப்படவில்லை. ’ என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Kollywood