Home /News /entertainment /

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சினேகா பிரசன்னா குடும்பத்துடன் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சினேகா பிரசன்னா குடும்பத்துடன் தரிசனம்

சினேகா பிரசன்னா குடும்பம்

சினேகா பிரசன்னா குடும்பம்

தெலுங்கு படம் ஒன்றில் சினேகாவின் நடிப்பை பார்த்து அசந்து போய் தான், அவர் மீது தான் காதலில் விழுந்ததாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார் பிரசன்னா.

    நடிகை சினேகா, தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார்.

    2009 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்குமான நட்பு ஆழமாக மாறி காதலாக உருவெடுத்திருக்கிறது. பின்னர் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். தற்போது இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.

    தெலுங்கு படம் ஒன்றில் சினேகாவின் நடிப்பை பார்த்து அசந்து போய் தான், அவர் மீது தான் காதலில் விழுந்ததாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார் பிரசன்னா. அதே போல், தனது கணவர் பிரசன்னா குறித்து பேசிய சினேகா, நான் திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் பிரசன்னா தான் என்னை எப்போதுமே மோட்டிவேட் செய்துக் கொண்டிருப்பார். நீ ஒரு சிறந்த நடிகை, நீ வீட்டில் இருப்பது எனக்கு கில்டியாக இருக்கிறது என பலமுறை கூறியிருக்கிறார் என்றார்.

    சில நேரங்களில் குட் பை அவசியம்... ரோஜா சீரியலை விட்டு விலகும் அர்ஜூன் சிபு சூர்யன்

    அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவேற்றும் சினேகா, தனது ரசிகர்களிடம் நிறைய பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் தனது கணவர் பிரசன்னா மற்றும் குழந்தைகளுடன் இன்று காலை விஐபி தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சாமி தரிசனத்திற்கு பின் அவர்கள் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டனர்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Sneha

    அடுத்த செய்தி