Home /News /entertainment /

பழனி முருகன் கோயிலில் சினேகா பிரசன்னா சாமி தரிசனம்!

பழனி முருகன் கோயிலில் சினேகா பிரசன்னா சாமி தரிசனம்!

சினேகா

சினேகா

பழனிமலை முருகன் கோயிலில் வழிபட, சிநேகா பிரசன்னா தம்பதி தங்கள் குடும்பத்துடன் வருகை புரிந்தனர்.

    நடிகை சிநேகா தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அந்தப் படம் தற்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளுள் முக்கியமான ஜோடி சினேகா பிரசன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த சினேகா, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல ஹிட் படங்களைக் கொடுத்தார்.

    பின்னர் பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்த போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து அவர்கள் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை பெருமளவு குறைத்துக் கொண்ட சினேகா, டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்ற தொடங்கினார்.

    இந்நிலையில் சமீபத்தில் பழனிமலை முருகன் கோயிலில் வழிபட, சிநேகா பிரசன்னா தம்பதி தங்கள் குடும்பத்துடன் வருகை புரிந்தனர். கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் வளாகத்திலேயே அவர்கள் சற்று நேரம் அமர்ந்திருந்தனர்.

    sneha prasanna, sneha prasanna palani murugan temple, sneha prasanna age, sneha prasanna instagram, sneha prasanna fanclub instagram, prasanna actor age, sneha family, sneha prasanna instagram picuki, sneha instagram, sneha prasanna advertisement, சினேகா பிரசன்னா, நடிகை சினேகா, நடிகை சினேகா பிரசன்னா, சினேகா பழனி முருகன் கோயில், சினேகா குடும்பம், பழனி முருகன் கோயில்
    கோயிலில் சினேகா


    அதன் பிறகு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மூலவர் தண்டாயுதபாணி சுவாமியை சினேகா மற்றும் அவரது குடும்பத்தினர் தரிசனம் செய்து, அதனைத் தொடர்ந்து போகர் சன்னதியிலும் சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

    இதையும் படிங்க - ரவுடி பேபி சூர்யா கைது

    வழிபாட்டை முடித்து விட்டு வெளியில் வந்த சினேகாவுடன் ஏராளமான ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Sneha, Tamil Cinema

    அடுத்த செய்தி