கெத்தா போட்டோ வெளியிட்ட நடிகை சினேகா; பயந்து நடுங்கிய வீடியோவை வெளியிட்ட பிரசன்னா!

கெத்தா போட்டோ வெளியிட்ட சினேகா; பயந்து நடுங்கிய வீடியோவை வெளியிட்ட பிரசன்னா!

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சூர்யா, ஜோதிகா, சூரி, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், வானி போஜன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.

  • Share this:
    தைரியமாக தடுப்பூசி போட்டு கொள்வது போல் நடிகை சினேகா புகைப்படம் வெளியிட்ட நிலையில், அவர் ஊசி போட பயந்து நடுங்கிய வீடியோவை பிரசன்னா வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பிரபலங்கள் தொடர்ந்து, கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டும் இல்லாமல் ரசிகர்களும், மக்களும், எவ்வித அச்சமும் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தாங்கள் தடுப்பூசி போட்டு கொள்ளும் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

    Also read: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை வாணி போஜன்

    ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சூர்யா, ஜோதிகா, சூரி, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், வானி போஜன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். அந்தவகையில், தற்போது தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளின் ஒருவரான சினேகா - பிரசன்னா ஜோடி முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Prasanna_actor (@prasanna_actor)






    சினேகா மிகவும் தைரியமாக தடுப்பூசி போட்டு கொள்வது போல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டருந்த நிலையில், சினேகா தடுப்பூசி போட்டு கொள்ள பயந்து நடுங்கிய வீடியோவை பிரசன்னா காமெடியாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
    Published by:Esakki Raja
    First published: