Home /News /entertainment /

கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் Sneak – Peak சிறப்பு காட்சி வெளியீடு…

கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் Sneak – Peak சிறப்பு காட்சி வெளியீடு…

விருமன் பட காட்சி.

விருமன் பட காட்சி.

யுவன் சங்கர் ராஜா இசையில், விருமன் படத்திலிருந்து 3 பாடல்கள் வெளிவந்து ஹிட்டாகியுள்ளன. டைட்டில் பாடலை இளையராஜா பாடியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கார்த்தி நடித்துள்ள விருமன் படத்திலிருந்து Sneak Peak சிறப்பு காட்சி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

    ஏற்கனவே படத்திலிருந்து ட்ரெய்ர் வெளியாகி 1 கோடி பார்வையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இன்று சிறப்பு காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் விருமன் திரைப்படம் உருவாகியுள்ளது. பருத்தி வீரன், கடைக்குட்டி சிங்கம், கொம்பன் படங்களைத் தொடர்ந்து கிராமத்து கதையில் நடித்துள்ளார் கார்த்தி.

    நடிகை மேகா ஆகாஷ் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்….

    சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கேமரா, எடிட்டிங், கலை என படத்தின் அனைத்து டிபார்ட்மென்டுகளும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர் என்று இயக்குனர் ஷங்கரே பாராட்டியிருந்தார்.

    நடிகை கங்கனா ரனாவத்திற்கு டெங்கு காய்ச்சல்… படக்குழுவினர் அதிர்ச்சி

    விருமன் நாளை வெளியாகவுள்ள நிலையில், படத்திலிருந்து Sneak Peak சிறப்பு காட்சி வெளியிடப்பட்டுள்ளது.



    யுவன் சங்கர் ராஜா இசையில், விருமன் படத்திலிருந்து 3 பாடல்கள் வெளிவந்து ஹிட்டாகியுள்ளன. டைட்டில் பாடலை இளையராஜா பாடியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



    தற்போது வரையில் அதிகாலை 4 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதால் கார்த்தி ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் உள்ளனர். முதல் காட்சி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Karthi

    அடுத்த செய்தி