Home /News /entertainment /

முடங்கிக் கிடந்த சிறு பட்ஜெட் படங்கள்... புத்துயிர் தரும் பொங்கல்!

முடங்கிக் கிடந்த சிறு பட்ஜெட் படங்கள்... புத்துயிர் தரும் பொங்கல்!

பொங்கல் ரிலீஸ் படங்கள்

பொங்கல் ரிலீஸ் படங்கள்

நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்திருக்கும் நாய் சேகர், லட்சுமி மேனனின் ஏஜிபி, விதார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கார்பன் என பல சிறு பட்ஜெட் திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாகவிருக்கின்றன.

    பொங்கல் ரேஸில் இருந்து பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் விலகிக் கொண்ட நிலையில் இதை பயன்படுத்தி பல சிறு பட்ஜெட் படங்கள் திரைக்கு வர உள்ளன.

    பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகையை மனதில் கொண்டு இந்த வாரம் இந்திய அளவில் அஜித்தின் வலிமை, ஆர்.ஆர்.ஆர், ராதே ஷ்யாம் போன்ற மெகா பட்ஜெட் படங்கள் வெளிவர காத்திருந்தன. ஆனால் ஒமைக்ரான் பரவல் காரணமாக திரையரங்குகள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் இந்தப் படங்கள் பின்வாங்கிய நிலையில் தற்போது இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல மாதங்களாக கிடப்பில் கிடந்த அரை டஜனுக்கும் மேற்பட்ட சிறு பட்ஜெட் படங்கள் பொங்கல் திருநாளில் வெளிவர தயாராகி வருகின்றன.

    இதில் சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம் அதிகப்படியான திரையரங்குகளில் வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. முன்பே தயாராகி விட்ட நிலையிலும் போதிய அளவிலான திரையரங்குகள் கிடைக்காததால் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துக் கொண்டே வந்த இத்திரைப்படம் தற்போது ஜனவரி 13-ம் தேதி 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இதேபோல் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகவிருந்த அஸ்வின் குமாரின் என்ன சொல்லப் போகிறாய் திரைப்படமும் இந்த பொங்கல் திருநாளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் அஸ்வின் பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில் படத்தின் ரிலீசை ஒத்திவைத்த படக்குழு தற்போது பொங்கலுக்கு இப்படத்தை வெளியிடுகின்றனர்.

    ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி

    மேலும் நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்திருக்கும் நாய் சேகர், லட்சுமி மேனனின் ஏஜிபி, விதார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கார்பன் என பல சிறு பட்ஜெட் திரைப்படங்கள் இந்த வெற்றிடத்தை நிரப்ப தயாராகி வருகின்றன.

    நடிகை நிதி அகர்வாலுடன் லிவிங் டுகெதரில் சிம்பு? விரைவில் திருமணம்?

    பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் பெரிய நடிகர்களின் படங்களுக்கு பதிலாக சிறு பட்ஜெட் படங்களே வெளிவரவேண்டும் என நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் பலமுறை கூறியிருந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் வாயிலாக அது சாத்தியமாகி இருப்பது சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Pongal, Pongal festival, Tamil Cinema

    அடுத்த செய்தி