Home /News /entertainment /

எஸ்கே 20 - சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எஸ்கே 20 - சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் 20

சிவகார்த்திகேயன் 20

படத்தின் அறிவிப்பு டீஸரில் வெளிநாடும், பாண்டிச்சேரியும் இடம்பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயனின் 20-வது படம் எது என்பது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சென்ற வருடம் வெளியான டாக்டர் உலக அளவில் 100 கோடிகளை கடந்து வசூலித்து சாதனை படைத்தது. அடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் நடித்துவரும் அயலான், சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடித்திருக்கும் டான் படங்கள் வெளியாக உள்ளன. இதையடுத்து அவரது 20-வது படமாக அறிமுக இயக்குனர் அசோக் நடிக்கும் சிங்கப்பாதையில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக சொல்லப்பட்டது. அனால், இந்த வரிசையில் தற்போது திடீர் மாற்றம்.

சிங்கப்பாதைக்குப் பதிலாக தனது முதல் நேரடித் தெலுங்குப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். ஜதி ரன்லு வெற்றிப் படத்தை இயக்கிய தெலுங்குப் பட இயக்குனர் அனுதீப் இந்தப் படத்தை இயக்க, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. தமன் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் படத்துக்கு தமன் இசையமைப்பது இதுவே முதல்முறை. ரிது வர்மா இந்தப் படத்தில் நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.



படத்தின் அறிவிப்பு டீஸரில் வெளிநாடும், பாண்டிச்சேரியும் இடம்பெற்றுள்ளது. இதனால் படத்தின் கதை இந்தியாவிலும், வெளிநாட்லும் நடப்பது போல் எழுதப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் இப்படம் தயாராகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Sivakarthikeyan

அடுத்த செய்தி